ஒருவழியா 2 கே கிட்ஸ் ரெட்ரோவ ஏத்துக்கிட்டாங்கப்பா… படத்தைத் தூக்கிவிட்டதே அதுதானாம்..!

by sankaran v |   ( Updated:2025-05-01 04:49:18  )
retro surya
X

retro surya

Retro review: இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான சூர்யா படம் ரெட்ரோ. கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வந்துள்ளது. இது குறித்து பிரபல பத்திரிகையாளர் சுபையர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம். சூர்யாவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வந்துள்ள படம் ரெட்ரோ. படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம். தூத்துக்குடியில் பெரிய டான் ஜோஜூ ஜார்ஜ். இவர் தான் மெயின் வில்லன். அவரது மனைவி லப்பர் பந்து படத்துல கெத்து வைஃப்பா நடிச்சவர். குழந்தை இல்லை. மச்சான் சரக்குகள் பதுக்கி வச்சிருக்குற இடத்துல கொள்ளை அடிச்சிட்டு அங்க இருக்குற வாட்ச்மேனைக் கொன்றுவிடுகிறார். அந்த வாட்ச்மேனோட குழந்தை தான் சூர்யா. இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்போம்னு ஜோஜூ ஜார்ஜ் மனைவி எடுத்து வளர்க்குறாங்க.

குழந்தைக்கு கராத்தே எல்லாம் கத்துக் கொடுக்குறாங்க. ஜோஜூ ஜார்ஜ் மனைவி இறந்துடறாங்க. அப்பா ஒரு கடத்தல் காரர்னு சூர்யாவுக்குத் தெரியுது. அப்பா, மகனுக்குள்ள சண்டை வருது. இடையில் சூர்யாவுக்கு காதல் வருது. அப்போ தந்தை மகனுக்குள்ள பிரச்சனையில் அப்பாவின் கையை சூர்யா வெட்டி விடுகிறார். அப்புறம் ஜெயிலுக்குப் போறாரு. 5 வருடத்துக்குப் பிறகு அந்தமானில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்கிறார் சூர்யா. அங்கு போய் எப்படி காதலியின் கரம் பிடிக்கிறார் என்பதுதான் கதை.

அந்தமானில் உள்ள ஒரு தீவுல நாசர் தனியாக ராஜாங்கம் நடத்தி வருகிறார். அவர் அங்க இருக்குற எல்லாரையும் அடிமையா வச்சிருக்காரு. சூர்யா அந்தத் தீவுல உள்ள மக்களை எப்படிக் காப்பாத்துறாரு? காதலியை எப்படி கரம்பிடிச்சாருங்கறதுதான் கதை. படம் ஃபுல்லாவே பைட். விதவிதமான பைட். ரசிக்கிற மாதிரி இருக்கு. படத்தோட ஒளிப்பதிவு ரொம்ப வித்தியாசமா இருக்கு. படத்துல பெரிய பிளஸ். சந்தோஷ் நாராயணன் மியூசிக். ரீரிக்கார்டிங் இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு.

கார்த்திக் சுப்புராஜ் மேக்கிங் ஆங்கிலப்படம் பார்த்த ஃபீலிங் இருக்கு. சூர்யா ரொம்ப ரிஸ்க் எடுத்து சிக்ஸ் பேக் வச்சி நல்லா பண்ணிருக்காரு. லாஜிக் மீறல்கள் இருக்கு. 90ஸ் கதை. இது பக்காவான ஆக்ஷன் படம். ரஜினி, விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. இன்டர்வெல்லுக்குப் பிறகு கதை தெரிஞ்சிடுது. கொஞ்சம் படத்தை ட்ரிம் பண்ணலாம். கங்குவாவை விட 1000 மடங்கு பெட்டர். 2 கே கிட்ஸ் இந்தப் படத்தை ஏத்துக்கிட்டாங்க. அப்படித்தான் எடுத்திருக்கார் இயக்குனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story