ரெட்ரோவை அடித்துக் காலி செய்த டூரிஸ்ட் ஃபேம்லி… பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்

by sankaran v |   ( Updated:2025-05-04 02:53:05  )
retro vs tourist family
X

retro vs tourist family

Retro vs Tourist family: சின்ன பட்ஜெட் படங்கள் கூட சில சமயம் பெரிய பட்ஜெட்ல வர்ற படங்களை அடித்துக் காலி பண்ணி விடுகிறது. அந்த வகையில் தான் இப்போது ரெட்ரோ படத்தைக் காலி பண்ணி உள்ளது டூரிஸ்ட் ஃபேம்லி. கலெக்ஷனில் ஒப்பிடும்போதும் முதல் 3 நாளில் உலகளவில் 9 கோடியை வசூலித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

ரெட்ரோ படத்தின் வசூலைப் பொருத்தவரை முதல் நாளை விட அடுத்த நாளில் கணிசமாக வசூல் குறைந்தது. முதல் நாளில் 19.25கோடி, 2வது நாளில் 7.75 கோடி, 3வது நாளில் 7.75 கோடி என வசூலித்துள்ளது. ஆனால் டூரிஸ்ட் ஃபேம்லி படத்தில் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 2 கோடி, 2வது நாள் 1.70 கோடி, 3வது நாள் 2.50 கோடி என மொத்தம் 6.20 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாளை விட 3வது நாளில் அதிக வசூல். இதை ஒப்பிடும்போது ரெட்ரோவை விட டூரிஸ்ட் ஃபேம்லியே சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் நல்ல வசூலைத் தந்துள்ளது.

#image_title

ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேம்லி படம் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

சேது, காதல், காதல் கோட்டை, வழக்கு எண் என பல நல்ல தரமான படங்களை வெற்றி அடைய வைத்துள்ளார்கள் மக்கள். அயோத்தி, குட்நைட், லவ்வர்ஸ்னு பல படங்களும் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் இப்போது டூரிஸ்ட் ஃபேம்லி படத்துக்கும் மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்திருக்காங்க.

பெரிய பெரிய தியேட்டர்களில் இந்தப் படம் திரையிட்டுருக்காங்க. எல்லாமே ஹவுஸ் ஃபுல். துபாயில் கூட ரெட்ரோ படத்தை விட இந்தப் படத்துக்கு அதிகமா கூட்டம் இருந்ததாம். இந்தப் படத்தை மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் படங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. ஆனால் கதைக்கு அது பொருத்தமாகவே இருக்கிறது. இந்த நிறுவனத்தைப் பார்த்தால் ஆரம்பத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் எப்படி சின்ன பட்ஜெட்டில தரமான படங்களைத் தயாரித்து கமர்ஷியலா ஹிட ;கொடுத்ததோ அப்படித்தான் எனக்குத் தெரிகிறது.

#image_title

எந்த ஹீரோவா இருந்தாலும் நமக்கு இது செட்டாகுமான்னு தான் பார்ப்பாங்க. அப்படித்தான் கதையைத் தேர்வு செய்வாங்க. ஆனா இந்தப் படத்துக்கு சசிக்குமார் அப்படி கதையைத் தேர்வு செய்யவில்லை. அவரு வயதுக்கு 15 வயசு பையன் வேற மகனா இருக்குறான். அந்தக் கேரக்டரையும் ஒத்துக்கிட்டாரு.

அதுக்குக் காரணம் அந்தப் படத்தோட கதை அவருக்குப் பிடிச்சது. அதுதான் காரணம். இந்தக் கதைக்கு இந்தக் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும் என்ற அடிப்படையில் அவர் ஒத்துக்கிட்டாரு. அதனால்தான் மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்காங்க என்கிறார் பிஸ்மி.

Next Story