ரேவதி இடுப்பில் கை வைத்த பாரதிராஜா... மண்வாசனை படத்தில் நடந்த சம்பவம்... ஏன்னு தெரியுமா?
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தில் ரேவதி தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் என்பதால் அவருக்கு பல விஷயங்களை பாரதிராஜா கற்றுக்கொடுத்திருக்கிறார்.
1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் மண்வாசனை. இப்படத்தின் மூலம் ரேவதி மற்றும் பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தனர். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
இப்படத்திற்கு பல நாயகிகளை தேடி வந்த பாரதிராஜா ஆஷா கெலுன்னி நாயர் என்பவரை கண்டுபிடித்தார். அவரும் படத்தின் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். அந்த ஆஷாவிற்கு தான் ரேவதி எனப் பெயரிட்டார் பாரதிராஜா. படத்தில் ரேவதி முத்துப் பேச்சியாக நடித்தார். முக பாவனைகளை அழகாக காட்டும் பரதநாட்டிய டான்ஸர் தான் ரேவதி. இருந்தும் அவருக்கு ஒரு காட்சியில் வெட்கப்பட தெரியவே இல்லையாம். இதற்காக அவர் இடுப்பில் குச்சியை கொண்டு கிச்சுகிச்சு மூட்ட கூறினாராம் பாரதிராஜா.
அது அவருக்கு சற்று நாணம் ஏற்பட்டதாம். அதை தொடர்ந்தே, இப்படி தான் வெட்கப்படணும் எனக் கூறி அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார் பாரதிராஜா. அதுமட்டுமல்லாமல், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரேவதிக்கு அழுகை வர வேண்டும். இதற்காக அவரை கன்னமாக அறைந்து இருக்கிறார் பாரதிராஜா. இதனால் கிளசரின் பயன்படுத்தாமல் ரேவதியால் அழுக முடிந்ததாக கூறப்படுகிறது.