1. Home
  2. Latest News

Vidamuyarchi : படம் தீயா இருக்கு!.. செம கூஸ்பம்ப்ஸ்!. விடாமுயற்சி பார்த்த ஃபேன்ஸ் சொல்வது என்ன?!..


Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. அஜித்தின் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகமெங்கும் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சி இன்று காலை 9 மணி என்றாலும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள், எக்ஸ் தளங்களில் என்ன பதிவிடுகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.


படம் சூப்பராக இருக்கிறது. பக்கா சஸ்பென்ஸ் திரில்லர். அஜித் கலக்கி இருக்கிறார். அஜித் - திரிஷா ரொமான்ஸ் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. அனிருத்தின் பிஜிஎம் அசத்தலாக இருக்கிறது. எதிர்பார்த்ததை விட படம் நன்றாக இருக்கிறது என பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மகிழ்திருமேனி படம் என்றாலே சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும். இதில் அஜித்தும் இருப்பதால் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கிறது. அஜித்தின் லுக்கும் நன்றாக இருக்கிறது. படத்தில் வரும் சண்டை காட்சிகள் அதகளமாக இருக்கிறது. அஜித் உடல் எடை குறைத்து மிகவும் அழகாக இருக்கிறார். திரையில் அவரை ரசிக்க முடிகிறது என சிலர் சொல்லியிருக்கிறார்கள்.


தியேட்டரில் நிறைய வைப் இருக்கிறது. பழைய என்னை அறிந்தால் அஜித்தை பார்த்தது போல் இருக்கிறது. அஜித் - அர்ஜூன் காம்போவும் தெறியாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சி கூஸ்பம்ஸாக இருக்கிறது. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது. தல அஜித்தின் பிரசன்ஸ் ரசிக்க வைக்கிறது என சொல்லி இருக்கிறார்கள்.

அதோடு, குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். தியேட்டரில் ரசிகர்கள் சீட்டில் உட்காரமல் நின்று கொண்டு கத்திக்கொண்டே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வைப் இருக்கிறது. கண்டிப்பாக அஜித்தை ரசிக்க வேண்டும் என்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும் என சிலர் கூறியிருக்கிறார்கள்.

ஒரு அஜித் ரசிகர் பேசும்போது ‘2026 தளபதி ரசிகர்களுக்கு. 2025 எங்களுக்குதான். வருஷத்தின் துவக்கத்திலேயே தல இப்படி ஒரு படம் கொடுத்துவிட்டார். அடுத்து குட் பேட் அக்லிக்காக வெயிட்டிங்’ என சொல்லி இருக்கிறார். முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமே வருவார்கள் என்பதால் போகப்போக மற்ற ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவரும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.