Categories: latest news

குபேரான்னு சொல்லிட்டு பிச்சைக்காரனா காட்டினா!.. தலை வலிக்குது!.. ஃபேன்ஸ் சொல்வது என்ன?!…

Kubera Review: தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் குபேரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. காலை முதலே இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் தேசிய விருது வாங்குவார் என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் படத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். தனுஷுக்கு மாஸ் காட்சிகளே இல்லை. சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் போல தனுஷுக்கு இந்த படம் அமைந்துவிட்டது. தனுஷ் நன்றாக நடித்திருந்தாலும் படம் நன்றாக இல்லை. தெலுங்கு படம் மாதிரி இருக்கு. தெலுங்கு டைரக்டர்னு தெரிஞ்சிந்தா படம் பார்க்க வந்திருக்க மாட்டோம்.

இந்த கதையை தனுஷ்கிட்ட கொடுத்திருந்தாலே நல்லா டைரக்ட் பண்ணியிருப்பார். குபேரான்னு பேர் வச்சிட்டு எங்க தலைவரை பிச்சைக்காரனா காட்டியிருக்கிறது எங்களுக்கு புடிக்கல. கதை சரியில்லை. திரைக்கதை எங்களுக்கு பிடிக்கவில்லை’ என ஒருவர் பொங்கியிருக்கிறார்.

இன்னொருவரோ ‘படம் நன்றாக இருக்கிறது. இயக்குனர் இந்த படத்தில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். முதல் பாதி நன்றாக இருந்தாலும் சில இடங்களில் லேக் இருக்கிறது. இரண்டாம் பாதியிலும் லேக் இருக்கிறது. ஓவரால் படத்தில் அரை மணி நேரம் குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தின் துவக்கத்தில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு துவங்கியிருப்பதே பெரிய மைனஸ். அதை சொல்லாமல் இருந்திருந்தால் கூட ரசிகர்கள் சஸ்பென்ஸுடன் படம் பார்த்திருப்பார்கள். படத்தில் முக்கிய பிரச்சனையை சொல்கிறார்கள். ஆனால், அதற்கான தீர்வுகளை சொல்லவில்லை. கிளைமேக்ஸ் திடீரென முடிந்தது போல் இருக்கிறது. அது பெரிய மைனஸ். தனுஷ், நாகார்ஜுனா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. நிறைய செலவு செய்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்’ என சொல்லியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

34 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

35 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

37 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago