Categories: latest news Review

எல்லாம் பில்டப்புதான்!.. பேய் எங்கடா மொமண்ட்!…. கிங்ஸ்டன் விமர்சனம் இதோ!

Kingston Review: ஜிவி பிரகாஷ் நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் முழு திரை விமர்சனம் இதோ!

கமல் பிரகாஷ் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, சேட்டன், அழகம் பெரும்பாள் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையும் அமைத்து இருக்கிறார்.

படத்தின் கதை: ரொம்ப வருடங்களாக இருக்கும் மீனவர்களின் பிரச்னையை அமானுஷ்ய விஷயமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கிராமத்தில் மீன் பிடிக்க சென்றால் பிணமாகத்தான் கரை ஒதுங்குகின்றனர்.

1982இல் இறந்து போன போஸ் என்பவரின் ஆவிதான் இதை செய்வதாக எல்லாரும் நம்புகின்றனர். தொடர்ந்து கன்னி பெண்களும் மாயமாகி கரை ஒதுங்க 1982ல் தொடங்கும் பிரச்னைக்கு 2025ல் மீட்கப்படுவதுதான் கதை.

பாசிட்டிவ்: முதலில் கதை பரபரப்பாக தொடங்குகிறது. அமானுஷ்யம் என்றதும் அலற வைக்கும் திரைக்கதை இருக்கும் என எதிர்பார்த்து வந்தால் முதல் பாதியிலேயே செம மொக்கை வாங்க வைக்கின்றனர். இருந்தும் ஓரளவுக்கு முதல் பாதியை பார்க்கலாம் நிலைதான்.

ஆனால் பிரச்னையே இரண்டாம் பகுதிதான். புலி வருவது போல மர்மமாக மிரட்டினாலும் எங்குமே பயமே வரவில்லை. என்னப்பா பில்டப்பா எனக் கேட்க தோன்றும். தொடர்ந்து படத்தின் காட்சிகளில் இயக்குனர் நிறைய சொதப்பி இருக்கிறார்.

இருந்தும், ஜிவி பிரகாஷ் குமாருக்கு நடிப்பில் புரோமோஷன்தான். ஆக்‌ஷனில் மாஸ் காட்டி இருக்கிறார். திவ்ய பாரதிக்கும் ரோல் சரியாகவே அமைந்து இருக்கிறது. இசையில் மற்றவர்களுக்கு பக்காவா போடும் ஜிவி தனக்கென வரும்போது தடுமாறுவது தான் புரியவில்லை.

விஎஃப்எக்ஸில் கவனம் செலுத்தி சரியாக செயல்படுத்தினாலும் திரைக்கதை அதையும் கவுத்து விட்டது. சரியாக எடிட்டிங் மற்றும் கதையில் கவனம் செலுத்தி இருந்தாலே படம் செம ஹிட்டடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ரேட்டிங்: 3/5

Published by
சிவா