Seetha Payanam: மகளுக்காக எக்குதப்பாக இறங்கும் அர்ஜூன்… சீதா பயணத்தில் விட்டதை பிடிப்பாரா?

Published on: August 8, 2025
---Advertisement---

Seetha Payanam: ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இயக்கத்தில் அவர் மகள் நடித்திருக்கும் சீதா பயணம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் நடிகர்கள் லிஸ்ட்டில் முக்கிய இடம் அர்ஜூனுக்கு உண்டு. நடிப்பில் ஆக்‌ஷன் என மாஸ் கட்டும் அர்ஜூன் நடிப்பில் மட்டுமல்லாமல் டைரக்டஷனிலும் ஆர்வம் உள்ளவர். முதன்முறையாக 1992ம் ஆண்டு சேவகன் என்ற படத்தினை டைரக்ட் செய்தார்.

இதை தொடர்ந்து அர்ஜூன் இயக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி இருக்கிறது. எல்லா படங்களுமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் துருவ் சர்ஜா நடிப்பில் வெளியான மார்ட்டின் படத்தின் கதையை எழுதியதும் அர்ஜூன்தான்.

தற்போது அர்ஜூன் அடுத்தக்கட்டமாக அவர் மகளை வைத்து சீதா பயணம் என்ற படத்தினை இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லவ் கதையாக இது உருவாகி இருந்தாலும் இதில் பையா படத்தின் வாடை அடிப்பதாகவே தோன்றுகிறது.

தமிழில் பட்டத்து யானை படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜூன். முதல் படமே விஷாலுடன் ஜோடி போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திரதிஷ்டவசமாக அதற்கு பின்னர் ஐஸ்வர்யா அர்ஜூன் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. ஏழு வருடத்திற்கு முன்னர் கன்னட படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன்பின்னர் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு வாய்ப்பே அமையவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா அர்ஜூன் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமையாவை காதலித்து கரம் பிடித்தார்.

தற்போது திருமணத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிப்பிற்கு திரும்பி இருக்கிறார். இப்படத்தில் முதலில் விஸ்வாக் சென் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அர்ஜூனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விலகியதை அடுத்து நிரஞ்சன் சுதி புது ஹீரோவாகி இருக்கிறார். மகளுக்காக டைரக்‌ஷனில் மட்டுமல்லாமல் ஸ்ரீராம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழ் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் துருவ் சர்ஜா மற்றும் அர்ஜூன் கேமியோ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment