Categories: latest news

Rajaputhiran: அப்பா, புள்ளை எமோஷனல் ஒர்க் அவுட்டாச்சா? ராஜபுத்திரன் எப்படி இருக்கு?

மகா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி, மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, கோமல் குமார், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டி.இமான் இசை அமைத்துள்ளார். 1991ல் ராமநாதபுரத்தில் இருக்கும் செல்லையாவின் மகன் பட்டா. அவனை எந்த ஒரு வேலைக்கும் போகவிடாம பத்திரமா பார்த்துக்கிடுறாரு.

பொண்ணை விட பையனுக்கு நல்லா செல்லம் கொடுக்குறாரு. அவரு விவசாயிங்கறதால பையனை எந்த அளவுக்கு நல்லா வளர்க்க முடியுமோ அப்படி வளர்க்குறாரு. ஆனா பையனோ எங்க அப்பா என்னை வேலைக்குப் போக விட மாட்டேங்குறாரு. அதனால நான் ஊதாரித்தனமாகத் தான் சுத்துவேன்னு சுத்துறாரு.

அப்பாவுக்கு விவசாயத்துல கஷ்டம் வந்துடுது. அப்போ பையன் நாம இனி வேலைக்குப் போயே ஆகணும்கற நிலைக்கு வந்துடுறாரு. அப்போ அந்தப் பகுதியில் உள்ள தாதாக்கள் ஒரு சிலர் உண்டியல்னு ஒரு விஷயத்தைப் பண்றாங்க. பிளாக் மணியை ஒயிட்டா மாத்துற வேலை.

அந்த வேலைக்கு ஹீரோ போறாரு. போனதுக்குப் பிறகு சில பிரச்சனை வரும். நடுவுல காதல் வேற. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் அப்பாவும், மகனும் எப்படி எதிர்கொள்கிறாங்க என்பதுதான் மீதிக் கதை.

பிரபுவின் நடிப்பு வெகு அருமையாக உள்ளது. என் பையன் எனக்கு மட்டும் தான். அவனை வேலைக்கு எல்லாம் போகச் சொல்ல மாட்டேன்னு அவனைத் தாங்கு தாங்குன்னு தாங்குறாரு. அது நம் நெஞ்சைத் தொடுற விதத்தில் இருக்கு.

பையன் பொண்ணைக் கூட்டிட்டு வந்த போதும்கூட, அவன் மேல கோபப்படாமல் என் பையன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. எல்லாரும் பாருங்கன்னு ஊருக்கே ஒரு கொண்டாட் டத்தோடு சொல்கிற இடத்திலும், என் பையன் ஃபாரின் போயிட்டு காசு அனுப்பிருக்கான்னு ஊரு முழுக்க சந்தோஷத்தில் சொல்கிற போதும் பிரபு நெஞ்சில் நிற்கிறார்.

பட்டாவாக வெற்றி அருமையாக நடித்துள்ளார். ஹீரோயினாக கிருஷ்ணப்பிரியாவும் அருமையான நடிப்பு. கவர்ச்சியிலும் கலக்குகிறார். மற்றபடி வில்லனாக வரும் கோமல் குமார் டெரரா வருகிறார். லிவிங்ஸ்டன் அவரு கூடவே வந்து போகிறார். அவருக்கு கேரக்டருக்கு ஏற்ற நடிப்பு. 91 பீரியடுக்கு ஏற்ற மாதிர மியூசிக் அருமை. ஒரு சில பாடல்கள் சபாஷ் போட வைக்கிறது.

படத்தின் மைனஸ் என்னன்னா ஸ்க்ரீன்பிளே இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாம். அப்பா புள்ளை எமோஷனல் ஸ்க்ரீன்ல இருக்கு. ஆனா ஆடியன்ஸ் கூட அவ்வளவாக கனெக்ட் ஆகல என்றே சொல்ல வேண்டும். பிரபுவுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான ரோல் கொடுத்துருக்கலாம். மொத்தத்தில் ராஜபுத்திரன் சுமார் ரகம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

17 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago