Connect with us

காதுல ரத்தம் வருது.. வேஸ்ட் லக்கேஜ்.. விடுதலை 2வை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

latest news

காதுல ரத்தம் வருது.. வேஸ்ட் லக்கேஜ்.. விடுதலை 2வை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

விடுதலை திரைப்படம்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நடிகர் சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விடுதலை 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தை பார்த்து பார்த்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். படம் வெளியானது முதலே ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான விமர்சனங்கள் பாசிட்டிவாக இருந்து வருகின்றது.

ப்ளு சட்டை மாறன் விமர்சனம்:

சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளு சட்டை மாறன் எப்போதும் எந்த திரைப்படம் வந்தாலும் அதற்கு விமர்சனங்களை அவரது பாணியில் தெரிவித்து இருப்பார். அந்த வகையில் விடுதலை 2 திரைப்படத்திற்கும் அவர் விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு முதல் பாகத்தையும் இரண்டாவது பாகத்தையும் ஒப்பீடு செய்து விமர்சனத்தை முன் வைத்திருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘ விடுதலை பாகம் 1 நம்மால் மறக்க முடியாத ஒரு கதை. அதற்கு முக்கியமான காரணம் அந்த திரைப்படத்தின் கதையும் திரைக்கதையும் தான். படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் என அனைத்து கதாபாத்திரங்களும் நமது மனதில் நிற்கும் அளவிற்கு இருந்தது.

அதே கதாபாத்திரங்கள் விடுதலை 2 பாகத்திலும் ரிப்பீட் ஆகின்றது. ஆனால் அந்த கதாபாத்திரங்கள் எதுவுமே நம் மனதில் நிற்கவில்லை. பார்ட் 1 படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்த சூரி கூட இந்த திரைப்படத்தில் பத்தோடு 11 என்கின்ற வரிசையில் தான் இருக்கின்றார். விஜய் சேதுபதி கேரக்டருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த கதாபாத்திரமும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை.

சித்தாந்தங்கள் கருத்துக்களை கூறி நம் காதில் ரத்தம் வர வைத்து விட்டார். அப்பறம் போராடுறாரு போராடுறாரு போராடிகிட்டே இருக்காரு. அவர் எப்படி போராளியானார் என்பதை சொல்வதற்கு மட்டும் 50 காட்சிகளை வைத்திருக்கிறார்கள். பார்ட் 1 இல் அவர் போராளி என்பதற்கான எந்த ஒரு சீனும் இருக்காது. ஆனால் இந்த படத்தில் அவர் போராளி தான் என்பதை நிரூபிப்பதற்கு ரொம்ப போராடிவிட்டார்.

ஒரு நல்ல திரைகதை என்றால் அந்த திரை கதையில் ஒரு சீனை எடுத்து விட்டால் கூட படம் முழுக்க அந்த ஜம்ப் தெரிய வேண்டும். அது போன்று தேவையில்லாத காட்சிகள் இந்த படத்தில் நிறைய இருக்கின்றது. குறிப்பாக விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் காட்சிகள் தேவையே இல்லாதது. அவர்களுக்கு பாட்டு வேற படம் முழுக்க இந்த காட்சிகளை வேஸ்ட் லக்கேஜ் போல தூக்கிக்கொண்டு சுற்றி வருகிறார்கள். எம்ஜிஆர் காலத்து ஹீரோயின் கதை போல இருக்கிறது.

விஜய் சேதுபதி யார் கேட்கிறாங்களோ கேட்கலையோ தன்னுடைய பின் கதையை சொல்லிக்கிட்டே இருக்காரு, யாருயா உன்கிட்ட இந்த கதையெல்லாம் கேட்டது என்று ஒருவர் கேட்பார். அப்போதும் கூட விடாமல் தனது கதையை கூறியே தீருவேன் என்று படம் முழுக்க தன்னுடைய பிளாஷ்பேக்கை கூறிக் கொண்டே இருக்கின்றார். முதல் பாகம் கூட ஓரளவு சுமாராக இருக்கின்றது.

படம் போகப் போக போராட்டம் போராட்டம்னு ரொம்ப போராடிட்டாங்க. நம்ம அதைவிட அதிகமா போராடி இந்த படத்தை பார்க்க வேண்டியதா போச்சு. மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு அப்படி என்றால் எல்லாருமே வெற்றிமாறன் திரைப்படத்தை பார்த்திருப்போம். அவர் இயக்கிய படங்களிலேயே ஒரு சுமாரான படம் என்றால் அது இது தான்’ என்று தெரிவிக்கின்றார்.

Also Read : ஒரு சிகரெட் கிடைக்குமா?!.. ரஜினி – மகேந்திரன் இடையே நடந்த வித்தியாசமான முதல் சந்திப்பு!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top