Review
Coolie: இவரு குட்டி புளூசட்டைமாறனா இருப்பாரோ? கூலியை இந்தக் கிழி கிழிக்கிறாரே!
இன்று வெளியாகி உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் கூலி. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கு? படம் உண்மையிலேயே எப்படி இருக்கு? பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் சொல்கிறார். இவர் சொல்றதைப் பார்த்தா குட்டி புளூசட்டை மாறனா இருப்பாரோன்னு தோணுகிறது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
இந்தப் படத்துல என்னதான் கதைன்னு யாருமே கண்டுபிடிக்க முடியாது. எத்தனை கொலை நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நோட்டு போட்டு எண்ணினா கூட கண்டுபிடிக்க முடியாது. எதுக்காக ரஜினி வர்றாரு? யாரைத் தேடிப் போறாரு? பிரண்டு இறந்துட்டான். ஓகே. அவங்க பொண்ணுக்கு பஞ்சாயத்து என்ன? அதுக்குள்ள சௌபின் சாகிர். அதுக்குள்ள நாகரஜூனா வர்றாரு. கதை எங்கெ எங்கேயோ போகுது.
திரைக்கதை ரொம்ப லோ வா இருக்கு. லோகேஷ் கனகராஜ் மேனரிசத்துல மாஸ் காட்டுவாரு. கைதி படத்துல அர்ஜூன்தாஸ் அப்படி இருப்பாரு. பாட்டு போட்டு பைட். அதே டெம்ப்ளேட். ரோலக்ஸ் பதிலா அமீர்கான். புதுசா எதுவுமே இல்லாததால ஆடியன்ஸ் சோர்ந்து போயிடுறாங்க. நாகர்ஜூனா தான் அல்ட்ரா டாக் காமெடி. ஸ்கிரிப்டே இல்லாதவன்தான் சும்மா கத்துங்கன்னு சொல்வான்.
அந்தக் கேரக்டரை மட்டும் தனியா பார்த்தா அப்படி ஒரு சிரிப்பு வரும். உபேந்திரா சூப்பரா இருக்காரு. அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி நிக்க வச்சிட்டாஙக. அவரு சூப்பரா நடிப்பாரு. அவரை பீடி குடிக்க வச்சிட்டாங்க. அதுக்கான ஸ்பேஸே இல்லை. வெட்டி வெட்டி எடுத்துட்டாங்க. படம் ஜம்ப் ஆகுறது நல்லாவே தெரியுது. சுருதிஹாசன் வழக்கம்போல ஒரு அழுகுணி கேரக்டர். நல்ல கேரக்டர் கொடுத்தா நல்லா நடிச்சிருப்பாங்க. பைட்ல டூப் இருக்குறது தெரியுது.

அதனால இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். சத்யராஜ் எதுக்கு வர்றாருன்னே தெரியல. அவர் நடமாடும் சுடுகாடு கண்டுபிடிக்கிறாரு. சேர்லயே வச்சி பொசுக்கிடுறாங்க. பெரிய வில்லன்னு நாகர்ஜூனாவ சொல்றாங்க. அவருகிட்ட 2000 பேர் வேலை செய்றாங்க. பாடி டிஸ்போஸ் பண்ண கூட தெரியாதா? படத்துலயே உருப்படியான ரோல் சௌபின் சாகிர். அவ்ளோ சூப்பரான நடிப்பு.
அவருடைய கேரக்டருமே ஒரு கட்டத்துல செத்துடுது. பிலிம் மேக்கிங் எங்கேன்னு தேட வேண்டி இருக்கு. ஒவ்வொரு இடத்துல இருந்து ஆள்களைக் கொண்டு வந்துட்டு இருந்தா போதுமா? கேரக்டர் நிக்க வேண்டாமா? ஜெய்லர் எப்படியோ ஜெயிச்சிருக்கலாம். எல்லாமே அப்படி வருமா? ரத்னா செமயா எழுதுற ஆளு. அவங்களை எல்லாம் ஏன் எடுத்தீங்கன்னு கேட்க வைக்கிறது படம். லேமினேட் பண்ணின அண்ணாத்த மாதிரி தான் இருக்கு.
படம் பார்த்துட்டு வெளியே வர்றவங்க சுக்குக் காப்பி குடிச்சாதான் சரியா வருவாங்க. அனிருத் தான் தெய்வம். அவருதான் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிச்சிருக்காரு. அவரோட பிஜிஎம் தான் நல்லாருக்கு. அவருதான் பவர் ஹவுஸ் அது இதுன்னு இழுத்துப் பிடிச்சி படத்தைத் தேத்திருக்காரு. சிவகார்த்திகேயனை நடிக்க விட்டுருந்தா செமயா இருந்துருக்கும். ப்ளாஷ் பேக்லாம் ரொம்ப பேடா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.