
Review
கூலி மாஸ்.. எனர்ஜிடிக் சூப்பர் ஸ்டார்.. ஆனா வீக் கண்டன்ட்.. ட்விட்டர் விமர்சனம்..
Coolie movie review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை உலகமெங்கும் வெளியானது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 6:00 மணிக்கு திரையிடப்பட்டது. அதேநேரம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்திய நேரப்படி இன்று காலை அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்த சிலர் ட்விட்டரில் படத்தைப் பற்றி பதிவிட்டு வருகிறார்கள்.

படத்தின் முதல் பாதியை பார்த்த உடனேயே பலரும் ட்விட்டரில் பதிவிட துவங்கினார்கள். முதல் பாதியை பார்த்துவிட்டு எனர்ஜிடிக் சூப்பர் ஸ்டார், ஸ்டைலிஷ் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அனிருத் அசத்தியிருக்கிறார்.. சிக்குடு பாடலுக்கு ரஜினி ஸ்டைலாக நடனமாடி இருக்கிறார் என ஒருவர் பதிவிட்டார்.

அதேபோல் முழு படத்தையும் பார்த்துவிட்டு பதிவிட்டு அவர் ‘கூலி போலி.. அதிகமா எதிர்பார்க்காதீர்கள்’ என பதிவிட்டிருந்தார். மேலும் கரிஷ்மேட்டிக் சூப்பர்ஸ்டார்.. ஃப்ளாஷ்பேக் கட்சிகள் மாஸாக இருக்கிறது.. சவுபின் அசத்தலாக நடித்திருக்கிறார்.. நாகார்ஜுனா ஸ்டைலாக இருக்கிறார்.. ஆனால் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை.. ரச்சிதா நன்றாக நடத்திருக்கிறார். அனிருத் அவரின் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் கதை வீக்காக இருக்கிறது.. திரைக்கதையும் சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது.. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்கிறது.. படம் ஆவரேஜ்’ என பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்து கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் ‘நீ ஒரு விஜய் ரசிகர்.. வேண்டுமென்றே இப்படி வன்முத்துடன் பதிவிடுகிறாய்’ என அவரை திட்டி வருகிறார்கள். ஒரு சினிமா விமர்சகர் முதல் பாதியை பார்த்துவிட்டு ‘முதல் பாதி என்கேஜாக இருக்கிறது.. படத்தையே ரஜினி தனது தோளில் தாங்கி இருக்கிறார்.. இடைவேளை வரை என்கேஜாக வைத்திருக்கிறார்கள்.. சில இடங்கள் கொஞ்சம் டல் அடிக்கிறது.. பாடல் காட்சிகள் வரும் இடங்கள் சரியாக அமைக்கப்படவில்லை.. இன்டர்வல் காட்சியை பெரிதாக எதிர்பார்த்தேன்.. ஆனால் அந்த அளவுக்கு இல்லை.. இரண்டாம் பாதி எப்படி இருக்கிறது’ என பார்ப்போம் என பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியில் என்பதால் 12 மணி அளவில் மட்டுமே முழு விமர்சனமும் வரும்.. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் 6மணி என்பதால் 10 மணி அளவில் முழு விமர்சனமும் தெரிய வரும். எனவே காலை 10 மணிக்கு மேல் படம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்து விடும்.