Connect with us

Review

தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?

2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிரட்டி வெற்றிக்கண்ட திரைப்படம் டிமான்டி காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பொதுவாக இரண்டாம் பாகமும் முதல் பாகமும் சம்மந்தமே இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த டெம்பிளேட்டை இப்படம் உடைத்து இருக்கிறது. முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்பட்ட ஹீரோ ஸ்ரீனிவாசம் இப்படத்தில் இறக்காமல் இருப்பார். அந்த காட்சியில் தான் படமே தொடங்குகிறது.

இதையும் படிங்க: பழசெல்லாம் மறந்து போச்சா!.. சிவகார்த்திகேயன் நன்றி கெட்டவர்!. விளாசும் பிரபலம்!…

இயக்குனருக்கு இந்த ஒரு விஷயத்துக்கே சலாம் போடலாம். ஒவ்வொரு நொடியிலும் பின்னணி இசையில் மட்டுமல்லாமல் காட்சியில் கூட மிரள வைத்துள்ளனர். அருள்நிதி எப்போதும் போல ஓவர் டிராமாட்டிக்காக இல்லாமல் சரளமான நடிப்பை கொடுத்து அசரடிக்கிறார்.

சமீபகாலமாக சில சீன்கள் மட்டுமே வரும் படங்களில் நடித்து வந்த பிரியா பவானிசங்கர். இப்படத்தின் மூலம் முக்கிய நடிகையாக அவதாரம் எடுத்து இருக்கிறார். நடிப்பில் மிரளவிட்டு தனக்கு ராசியில்லை என சொன்னவர்களின் வாயை அடைத்துஇருக்கிறார். இப்படம் அவருக்கு கோலிவுட்டில் அடுத்த சூப்பர் இன்னிங்ஸாக அமையும் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயம்… அடித்துச் சொல்லும் பிரபலம்

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Review

To Top