Connect with us

Review

கிளைமேக்ஸில் வெயிட்டான ட்விஸ்ட்!.. படத்துல பிரபாஸ் ஹீரோவா? அமிதாப் ஹீரோவா?.. கல்கி விமர்சனம் இதோ!..

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் வைத்து பல இயக்குநர்கள் பிரம்மாண்டமாக படம் இயக்குகிறேன் எனக் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக கல்கி யுகத்தை பற்றிய கதையையே உருவாக்கி காட்டுகிறேன் என நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் படம் தான் இந்த கல்கி 2898 ஏடி.

கல்கி படத்துக்கு முன்னோட்டமாக புஜ்ஜி கார் எப்படி உருவானது மற்றும் பைரவா யார் என்பதை ஒரு அனிமேஷன் படமாக கடந்த மாதம் ஓடிடியில் வெளியிட்டு இருந்தனர். அதில், இடம்பெற்ற அளவுக்கு கூட காமெடி காட்சிகளில் பிரபாஸ் முகத்தில் இருந்து எந்தவொரு ரியாக்‌ஷனும் வரவில்லை.

இதையும் படிங்க: கொளுந்துவிட்டு எரியும் த்ரிஷா பிரச்சினை.. விஜயோட டேக்டிக்ஸ்தான் அந்த புகைப்படம்! அப்போ உண்மையா?

கிருஷ்ணரிடம் சாபம் வாங்கிய அஸ்வத்தாமன் அந்த சாபத்தை போக்க கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள விஷ்ணு பகவானை சுமக்கும் தீபிகா படுகோனை வில்லன் கமலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

தீபிகா படுகோனை பிடித்துக் கொடுத்தால் காம்ப்ளக்ஸுக்கு சென்று விடலாம் என திட்டமிடும் பிரபாஸ் ரகசியமாக ஷாம்பாலா எனும் இடத்தில் பசுபதி மற்றும் சோபனாவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருக்கும் தீபிகா படுகோனை காட்டிக் கொடுக்கிறார். அந்த இடத்தையும் அந்த மக்களையும் அழித்து விட யாஷ்கினின் தளபதி போர் தொடுக்கிறார். தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கல்கியை அழிக்க யாஷ்கினின் ஆட்கள் அவரை தூக்கிச் செல்ல கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் முதல் பாகத்தின் கதையாக உள்ளது.

இதையும் படிங்க: வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்! மணிரத்னம் சொன்ன ஒரு வார்த்தை.. இன்று வரை தொடரும் மோதல்

அடுத்த பாகத்தில் தான் முழுக் கதையே தெரிய வரும் என்றும் இந்த படம் மொத்தமும் ஒரு டிரெய்லர் தான் கண்ணா என்கிற ரேஞ்சில் நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். கேமியோவாக மிருணாள் தாகூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா மற்றும் ராஜமெளலி வந்து செல்லும் காட்சிகளில் விசில் பறக்கிறது.

மொத்தத்தில் இந்தியாவில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் மற்றும் புராணம் கலந்த படமாக இந்த கல்கி 2898 ஏடி உருவாகி உள்ளது. ஆனால், இது வெறும் ஆரம்பம் மட்டும் தான்!

இதையும் படிங்க: பில்டப் கொடுத்த அளவுக்கு பிரபாஸ் படம் இருக்குதா?.. கல்கி ட்விட்டர் விமர்சனம் எப்படி இருக்கு?

கல்கி – கண்கொள்ளா காட்சி!

ரேட்டிங் – 3.75

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top