Categories: Review

ஆடுஜீவிதம் முதல் விமர்சனம்!.. மணிரத்னமுடன் படம் பார்த்த கமல்ஹாசன்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

பென்யாமின் எழுதிய ’தி கோட் லைஃப்’ நாவல் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய நாவல். இதை படமாக்க பலரும் முயற்சித்து வந்த நிலையில், மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி பிருத்விராஜ் நடிப்பில் இந்த படத்தை 2008ம் ஆண்டு ஆரம்பித்தார்.  கொஞ்சம் கொஞ்சமாக உருவான இந்த படம் சுமார் 10 ஆண்டு கால உழைப்பை பெற்று இப்படியொரு பெரும் படைப்பாக உருவாகி வந்திருக்கிறது.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவருக்கும் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து பிருத்விராஜ் போட்ட நிலையில், படத்தை பார்த்த கமல்ஹாசன் பிருத்விராஜின் நடிப்பை பார்த்து மிரண்டே போய் விட்டதாகவும், இப்படியொரு படைப்பு இந்திய சினிமாவின் பெருமை என்றும் உலகத்தரம் வாய்ந்த படமாக காலம் கடந்தும் இந்த ஆடுஜீவிதம் ஜீவிக்கும் என்றும் கமல்ஹாசன் தனது முதல் விமர்சனத்தை தந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து கமல்ஹாசன் பாராட்டிய நிலையில், அந்த படம் தமிழ்நாட்டில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள ஆடுஜீவிதம் படமும் மலையாளத்தில் மட்டுமின்றி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் தேர்தலுக்கு முன்பாக தியேட்டருக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை போல இதுவும் ஒரு ரியல் சர்வைவர் த்ரில்லர் தான். நஜீப் என்பவர் பாலைவனத்தில் கடும் கஷ்டங்களை அனுபவித்து அங்கிருந்து தப்பித்து வந்த கதை தான் இந்த ஆடுஜீவிதம். இதில், பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்து மணிரத்னமே மிரண்டு போய் விட்டார் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த மாதிரி படம் வந்தா நடிப்பேன்.. இயக்குனர்களுக்கு சிக்னல் கொடுத்த லோகேஷ்

Saranya M
Published by
Saranya M