Categories: Review

Kanguva review: பாகுபலி, கேஜிஎப்பைத் தூக்கி சாப்பிட்ட கங்குவா..! படம் பார்த்தவங்க சொல்றாங்கப்பா..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரித்த படம் கங்குவா. சூர்யா முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார். திஷா பதானி, பாபிதியோல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Also read: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…

பெரும் போராட்டங்களுக்கு இடையில் இன்று படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு படமா என அனைவரும் வியந்து வருகின்றனர். என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க.

ஹாலிவுட் ரேஞ்சு

kanguva

படம் பார்த்த ரசிகர் ஒருவர் அண்ணன் வந்து இந்த மாதிரி நடிச்சிருப்பாருன்னு நாங்க எதிர்பார்க்கல. பசங்களுக்கும், குட்டீஸ்சுக்கும் ரொம்ப பிடிக்கும் என்கிறார். படம் பார்த்த மற்றொரு ரசிகர் ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தான் படம் இருக்கு. கேஜிஎப், பாகுபலியை எல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்குத் தான் படம் இருக்கு என்கிறார்.

தெறிக்க விட்டுருக்காங்க

இன்னும் கூஸ்பம்ப்ஸ் குறையல… வேற லெவல்… ப்ரோ என அட்டகாசமாக என்ஜாய் பண்ணியபடி பல ரசிகர்கள் உற்சாகமாகச் சொல்கின்றனர். கெட்டப், மியூசிக்லாம் தெறிக்க விட்டுருக்காங்க. எதிர்பார்த்ததை விட அதிகமாத் தான் இருக்குது என்கிறார்.

கிராபிக்ஸ் அந்தளவு இல்ல. நார்மலா தான் இருக்கு. ஆனா அந்த டயலாக் தான். சிவா சார் இப்படி எடுப்பாருன்னு நினைச்சிக்கூட பார்க்கல என்கிறார்.

வேறொரு ஜானர்

விஸ்வாசம், வீரம், சிறுத்தைன்னு இதுவரைக்கும் கம்ப்ளீட்டா காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன்ல தான் போய்க்கிட்டு இருந்தது. ஆனா கம்ப்ளீட்டா அதை உடைச்சி வேறொரு ஜானர்ல சிவா சார் கொடுத்துருக்காரு என்கிறார் ஒரு ரசிகர்.

1000 கோடி

Also read: கமலுக்கு உலகநாயகன் பேரு வந்ததே அதுக்குத்தானாம்..! ஆராய்ச்சியின் முடிவில் சொன்ன பிரபலம்!

மாஸ் கொல மாஸ். படத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அந்த மாதிரி இருந்துச்சு என்கிறார் ஒரு ரசிகர். இந்த விமர்சனத்தை வைத்துப் பார்க்கும்போது படம் நிச்சயமாக 1000 கோடி கலெக்ஷனை அள்ளும் முதல் படமாக இருக்கும் என்றும் கமெண்ட் பாக்ஸில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v