
Review
Coolie: அடிப்பொலி!.. ஜெயிலருக்கும் மேல!.. கூலியை கொண்டாடும் கேரள ரசிகர்கள்!..
Coolie: ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சி ரிலீஸ் ஆனாலும் ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6:00 மணிக்கும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
காலை முதலே கூலி படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினியை லோகேஷ் கனகராஜ் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கமலுக்கு ஒரு விக்ரம் எனில் ரஜினிக்கு ஒரு கூலி.. ரஜினி படத்தை தூக்கி சுமந்திருக்கிறார்.. சவுபின் சாகிர், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. அனிருத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.. என்றெல்லாம் பலரும் டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஒருபக்கம் லோகேஷின் வழக்கமான படம் போல கூலி இல்லை.. சில இடங்களில் நன்றாக இருந்தாலும்.. பல காட்சிகளில் அவரின் டச் இல்லை.. புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை.. படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் நன்றாக இருந்தாலும் சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் கேமியோ வேடங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல இருக்கிறது.. வழக்கமான லோகேஷ் படத்தை எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றம்தான்.. எனவே பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வராதீர்கள்’ என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.
ஆனால் கேரள சினிமா ரசிகர்கள் குறிப்பாக கேரள ரஜினி ரசிகர்கள் கூலி படத்தை கொண்டாடி வருகிறார்கள். இன்று காலை ஆறு மணி சிறப்பு காட்சியை பார்த்த அவர்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது ஊடகங்களுக்கும் youtube சேனலுக்கும் கொடுத்த பேட்டிகளில் ‘படம் சூப்பராக இருக்கிறது.. லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து மாஸ் காட்டி இருக்கிறார்.. ரஜினி சூப்பர் மாஸ்.. ஜெயிலரை விட படத்திற்கும் மேலே.. அடிப்பொலி.. ஆக்சன் காட்சிகள் தரமாக இருக்கிறது.. படம் முழு திருப்தியாக இருக்கிறது.. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.