
Review
Madharasi Trailer: இன்னொரு துப்பாக்கியா? ‘மதராஸி’ டிரெய்லர் எப்படி இருக்கு? இத கவனிச்சீங்களா?
Madharasi Trailer: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மதராஸி. அனிருத் இசையில் ஸ்ரீ லட்சும் மூவிஸ் பேனரில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இன்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படம்தான் மதராஸி.
அதனால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் அமரன் என்பது சிவகார்த்திகேயனுக்கும் சரி ராஜ்கமல் நிறுவனத்துக்கும் சரி பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதனால் அதை தக்க வைக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் இருந்தார். அது மதராஸி படம் மூலம் நிறைவேறுமா என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. ஏனெனில் அதற்கு காரணம் ஏஆர் முருகதாஸ்.
தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த முருகதாஸை கோலிவுட் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் தான் துணிந்து கால்ஷீட் கொடுத்தார். அவருக்கும் இந்த படம் ஒரு பெரிய கம்பேக்காக இருக்குமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில்தான் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
டிரெய்லரில் பார்க்கும் போது முழு நீள ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என தெரிகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே சிவகார்த்திகேயன் காணப்படுகிறார். டிரெய்லரை பார்த்த பலரும் இன்னொரு துப்பாக்கி என்றே விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். பக்கா விண்டேஜ் முருகதாஸை இந்தப் படத்தின் மூலம் பார்க்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு முன் இப்படியான ஒரு ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயனை பார்த்ததில்லை என்றும் பாராட்டி வருகிறார்கள். டிரெய்லர் கட்டும் மாஸ், வில்லனாக வித்யூத் வேற லெவல். துப்பாக்கி படத்திலும் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். பிஜிஎம் எப்போதும் போல அனிருத் மாஸ் காட்டிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். டிரெய்லர் ரிலீஸாவதற்கு முன்பு வரை மதராஸிக்கு ஹைப் பெரியதாக இல்லை.
ஆனால் டிரெய்லர் வெளியான பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளதாக தெரிகிறது. இதில் கவனிக்கப்படும் விஷயம் என்னவெனில் துப்பாக்கி படத்தை கனெக்ட் செய்யும் விதமாக டையலாக் இந்தப் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது வித்யூத் கூறும் போது ‘துப்பாக்கி யார் கைல வேணுனாலும் இருக்கலாம். ஆனால் வில்லன் நான் தான்’ என கூறியிருப்பார்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் டிரெய்லர் எக்ஸ்லெண்ட். சிவகார்த்திகேயன் ஆக்ஷன் வேற லெவல். டிரெய்லர் ரிலீஸுக்கு பிறகு படத்தின் ஹைப் அதிகமாகியிருக்கிறது. அனிருத்திடம் இருந்து வித்தியாசமான பிஜிஎம் இந்தப் படத்தில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.