
Review
New Tamil Movie: இன்று ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? போலீஸ் கெட்டப்பில் கலக்கும் சோனியா அகர்வால்
New Tamil Movie: ஒரே நாளில் பல படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் சமுத்திரக்கனி நடிப்பில் வீ நாகேந்திரன் இயக்கத்தில் ரிலீஸான திரைப்படம் வீரவணக்கம். இந்த படத்தில் பரத் சுதீஷ், ரித்தேஷ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் பி கிருஷ்ணபிள்ளையின் புரட்சியாளர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமாக இந்த படம் அமைந்துள்ளது.

சமூக அரசியல் போராட்டங்களை ஆராய்வது தொடர்பான கதையாக இந்த படம் வெளிவந்திருக்கின்றன. தோழர் கிருஷ்ணபிள்ளை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் சமுத்திரக்கனி. ஒரு புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்று படத்தை உருவாக்கியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் நாகேந்திரன். அடுத்ததாக ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் கனிமொழி, தருண் விஜய், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குற்றம் புதிது .

கிரைம் திரில்லர் பின்னணியில் உருவான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நவீத் பரீத் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் சொட்ட சொட்ட நனையுது. இந்த படத்தில் நிஷாந்த் வர்ஷினி, வெங்கட், கே பி ஒய் ராஜா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒரு காமெடி கலந்த திரைப்படமாக இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது .
அடுத்ததாக சோனியா அகர்வால் நடிப்பில் பா பாண்டியன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் கிப்ட். இந்த படத்தில் சோனியா அகர்வால் ஒரு போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். இதுவும் ஒரு க்ரைம் திரில்லரில் விறுவிறுப்பான காவல் விசாரணை திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதுவரை சோனியா அகர்வாலை ரொமான்டிக் ஹீரோயினாகவே பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவத்தை தரும் .

அடுத்ததாக முருக ராசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் கடுக்கா. இதில் விஜய் கௌரி, சினேகா, மணிமேகலை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது ஒரு ரொமாண்டிக் காதல் திரைப்படமாக இன்று வெளியாகி இருக்கிறது .அடுத்ததாக ஜீன் மோசஸ் இயக்கத்தில் வினோத், எலிசபெத் ,சுகன்யா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பேய் கதை. காமெடி ஹாரர் திரில்லர் திரைப்படமாக இது இன்று வெளியாகி இருக்கிறது.
இதற்கு மத்தியில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான லோகா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள உலகில் இந்தப் படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இது ஆக்சன் மற்றும் பேண்டஸி திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.