இந்த மாதிரி படஙகள் ஓட ஆரம்பித்தால்... காட்டாளனை கிழித்து தொங்க விட்ட புளு சட்டை மாறன்
சமீபகாலமாக இயக்குனர்களுக்கு ஃபேன் இந்தியா மோகம் அதிகரித்து வருகிறது. புஷ்பா, கேஜிஎப் வெற்றிகளால் தற்போது வரும் புதிய இயக்குனர்கள் கூட பேன் இந்தியா படங்களையே எடுக்க விரும்புகின்றனர். அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள படம் காட்டாளன். பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், ஜெகதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் பிரபல் சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் இப்படத்தின் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியபோது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டது மாதிரி நாங்களும் ஃபேன் இந்தியா படம் எடுக்கிறோன் என்று கூறிக் கொண்டு புஷ்பா படத்தில் வரும் வில்லனையும் அல்லக்கைகளையும் கூட்டிட்டு வந்து படத்தை எடுத்து வச்சீருக்காங்க. சமீபத்தில் பார்த்த மலையாள படங்களிலேயே காட்டு மொக்கை படம் என்றால் அது இதுதான். எப்பபார்த்தாலும் குறுக்கயும் மறுக்கையும் நடந்துகிட்டேதான் இருக்கங்க. சரி கண்ணை மூடிக்கிட்டு பார்க்கலாம் என்றால் இசையமைப்பாளர் காதை கிழித்து விட்டுவிட்டார் போல. யுனிவர்சலுக்கு எல்லாம் ஒரு தலைவர் இருக்கிறாரே அவர் இந்த படத்தில் ஒரு கேமியோ வேறு செய்துள்ளார். அவர் எதுக்கு வந்தார் என்றே தெரியவில்லை. இந்த படம் எல்லாம் தப்பி தவறி ஓட ஆரம்பித்தால் நம்மை கொல்லாமல் விட மாட்டார்கள் என்று கிழித்து தொங்க விட்டுள்ளார் புளு சட்டை மாறன்.
