கமலுக்கு நான் அம்மாவா? டென்ஷன் ஆன நடிகை… அட அவரா? சூப்பர்ஹிட் படமாச்சே!

kamal
கமல் 3 வேடத்தில் நடித்த சூப்பர்ஹிட் படம் அபூர்வ சகோதரர்கள். 1989ல் வெளியானது. இளையராஜா இசையில் அனைத்துப் பாடல்களும் அருமை. இந்தப் படத்தில் கமல் நெட்டை, குட்டை என இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். அதிலும் குள்ள கமலாக வரும் போது அனைவரையும் அசர வைத்து விட்டார். இந்த மாதிரி அவரால் எப்படி படம் முழுவதும் நடிக்க முடிந்தது? அதுவும் டெக்னாலஜியே இல்லாத காலகட்டத்தில் என்றெல்லாம் எல்லாரும் வியப்பா பேசுனாங்க.
இந்தப் படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இது ஒரு ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆரம்பத்துல குள்ளமாக நடிக்க கமல் பல டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் கத்துக்கிட்டு வந்து படத்தை எடுத்தாங்களாம். 15 நாள் எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்ததுல திருப்தி இல்லையாம்.
குள்ள கமல் ஆரம்பத்துல ஒரு போர்ஷன்ல மட்டும்தான் வர்ற மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் பஞ்சு அருணாசலம் அதைப் பார்த்துட்டுத் தான் இதுல குள்ள கமல் தான் ஹீரோ. அவரை மையமாக வச்சி தந்தையைக் கொன்னவங்களை பழிவாங்குற கதையா எடுங்கன்னு சொல்ல, கமல் திரைக்கதையை எழுதியுள்ளார்.

முதன்முதல்ல இந்தக் கதையில கமலின் அம்மாவா நடிச்சது காந்திமதி. அதன்பிறகு கதை மாறியதும் கமலின் வளர்ப்பு அம்மா ரோலுக்கு மனோரமாவை நடிக்க வச்சாங்க. இந்தப் படத்துல நடிகை ஸ்ரீவித்யா ரோலுக்கு முதல்ல நடிக்க லட்சுமியைத் தான் கேட்டாங்களாம்.
அதுக்கு அவர் டென்ஷனாகி கமலுக்கு அம்மாவா? எனக்கு அவரு அப்பாவா நடிக்கணும்னா ஒத்துக்குவாரான்னு கேட்டுள்ளார். அதன்பிறகு அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அப்புறம் தான் நடிகை ஸ்ரீவித்யாவை நடிக்க வச்சாங்களாம்.