திரை உலகினருக்கே தெரியாமல் 2 ஆண்டுகளாக நடந்த ராமராஜன் நளினி - காதல்... ஜெயித்தது எப்படின்னு தெரியுமா?

திரை உலகில் எத்தனையோ காதல் மலர்ந்தது. ஆனால் அவற்றில் ஒரு சில காதல் தான் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பல திரையுலக ஜோடிகள் பிரிந்தும் உள்ளனர். அவர்களில் ஒரு ஜோடி தான் ராமராஜன் - நளினி ஜோடி. ஜெயித்தது எப்படின்னு தெரியுமா?

80களில் தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. 1984ல் மட்டும் 18 படங்களில் நடித்துள்ளார். ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சின்ன வேடத்தில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் ஓம் சக்தி படத்திலும் சின்ன கேரக்டரில் வந்தார். டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா படம் தான் அவருக்கு பிரபலம். இந்தப்படத்தில் நளினியுடன் இணைந்து நடித்தவர் கங்கா. அவரும் இதில் தான் அறிமுகம். ஒரே படத்தில் பிரபலம்.

மோகன் உடன் சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். டி.ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம் படத்தில் அவரது தங்கையாக நடித்தார். தொடர்ந்து விஜயகாந்த், மோகன் நடித்த நூறாவது நாளில் நடித்தார். மணிவண்ணன் இயக்கினார். படம் செம மாஸ்.

அதன்பிறகு விஜயகாந்த், தியாகராஜன் நடித்த நல்ல நாள் படம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நன்றி, ஓசை, வம்ச விளக்கு படங்களில் நடித்து நல்ல பெயரை வாங்கினார். இவற்றில் சிவாஜியுடன் இணைந்து இவர் நடித்த படம் தான் வம்ச விளக்கு. தொடர்ந்து அவருடன் சாதனை, எழுதாத சட்டங்கள் படத்திலும் நடித்தார்.

Ramarajan, Nalini

Ramarajan, Nalini

டி.ராஜேந்தரின் உறவைக் காத்த கிளி படத்தில் நடித்து அசத்தினார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து 1985ல் ராமராஜனுடன் மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் நடித்தார். இதில் அவருக்கு சிறப்பு தோற்றம். அப்போது சூட்டிங்கில் தான் இருவரும் முதன் முதலாக சந்தித்தனர். அப்போதே காதல் வந்துவிட்டது.

ஆனாலும் அவர்களது காதல் 2 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளவர்களுக்கே தெரியாது. பெற்றோர்களின் எதிர்ப்பு வரவே அதையும் மீறி 1987ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஜோதிடத்தை நம்பி பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it