பட்ஜெட்டே அல்லுவிட வைக்குதே!.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘காந்தாரா 2’!..
Kantara 2 : சமீபகாலமாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யபப்ட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. அப்படி கன்னட நடிகர் ரிசப் ஷெட்டி நடித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம்தான் காந்தாரா. கர்நாடகாவின் ஆதிவாசிகள் இடையே இருக்கும் தெய்வ வழிபாட்டை அடிப்படையாக வைத்து உருவான படம் இது.
இப்படத்தை ரிசப் ஷெட்டியே இயக்கியிருந்தார். இப்படத்தில் அச்சுத் குமார், கிஷோர், மானஷி சுதிர் என பலரும் நடித்திருந்தனர். மர்மமான காடுகளில் நடக்கும் இந்த கதை தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது. படிப்பறிவில்லாமல் காட்டில் வசிக்கும் மக்களை அரசியல்வாதி ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார், அவருக்கு அவர்கள் வணங்கும் தெய்வம் தந்த தண்டனை என்ன என்பதுதான் கதை.
இதையும் படிங்க: நாடக நடிகர் டூ வெள்ளி விழா நாயகன்!. திரையுலகில் உச்சம்தொட்ட மைக் மோகன்…
இதற்கு ரிசப் ஷெட்டி சிறப்பான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த வித்தியாசமான கதை ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால் இப்படம் கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்து ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதோடு, இந்த படத்தை பார்த்த ரஜினி, தனுஷ் உள்ளிட பல நடிகர்கள் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டி பேசினார்கள்.
படம் வெளியாக ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், இப்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் ரிசப் ஷெட்டி. கடந்த ஒரு வருடமாக இதற்காக வேலையில் ஈடுபட்டு வந்தார். பல ஆராய்ச்சிகளையும் அவர் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்த படத்தின் கதை 300 - 400 AD காலகட்டத்தில் நடப்பது போல கதையை எழுதி இருக்கிறாராம். இப்படத்திற்கான பூஜை வருகிற 27ம் தேதி நடக்கவுள்ளது. அதோடு, இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொடர்பான செய்திகள் விரைவில் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வளரும்போது அந்த நடிகர் தங்கிய அதே அறையில் தங்கிய அர்ஜூன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..