கடந்த சில வருடங்களாகவே வாட்டர்மெலன் ஸ்டார் என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் சுதாகர். ரஜினியை போல் நடிப்பேன், சிவாஜி போல் அப்படியே நடிப்பேன், சூர்யாவை போல் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் திரைப்படங்களில் அந்த காட்சிகளில் எப்படி நடித்தார்களோ அது போல நடித்துக்காட்டுகிறேன் என சொல்லி நடித்துக்காட்டி வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கதறவிடுபவர் இவர்..
இந்தியாவிலேயே நான் சிறந்த நடிகர்.. ஆனால் எனக்கு வாய்ப்புகள் இல்லை.. நான் ஹீரோவாக நடிப்பேன்.. வில்லனாக நடிப்பேன்.. ரொமான்ஸ் செய்வேன்.. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடிப்பேன் என்றெல்லாம் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். மேலும், நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். கஜினி திரைப்படத்தின் கையில் வாட்டர்மெலன் வைத்துக்கொண்டு சூர்யா செய்யும் ரியாக்ஷனை செய்து காட்டி வாட்டர்மெலன் ஸ்டார் என தனக்கு தானே பட்டம் வைத்துக்கொண்டார்..
இந்நிலையில்தான் நடிகரும் இயக்கமான ஆர்.ஜே.பாலாஜியிடம் சமீபத்தில் இவரின் புகைப்படத்தை காட்டி கருத்து கேட்டபோது ‘நோ கமெண்ட்ஸ்.. இப்போது எல்லோரின் கையிலும் செல்போன் இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது பல சமூக ஆர்வலர்கள் மொபைலை பயன்படுத்திதான் பலருக்கும் உதவி செய்தார்கள்.. எனவே மொபைலை பாசிட்டிவ், நெகட்டிவ் ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தலாம்’ என்று கூறியிருக்கிறார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…