Connect with us

Cinema News

கார் ஓட்ட தெரியாதவன்லா நடிக்க வந்துட்டானுங்க… 50 பேர் முன்னாடி அசிங்கப்பட்ட பாலாஜி!

ரேடியோ ஜாக்கியாக மீடியா உலகில் நுழைந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி பிக் FMல் அவர் தொகுத்து வழங்கிய க்ராஸ் டாக் நிகழ்ச்சிக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். அதன் பின்னர் சினிமாவில் எதிர்நீச்சல், தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும், வடகறி, ஜில் ஜங் ஜக், காற்று வெளியிடை, ஸ்பைடர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்த படத்தில் நயன்தாராவுடன் நல்ல நட்பு ஏற்பட்டதால் அவரை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: அவருக்கா இந்த நிலமை?.. சீரியலில் நடிக்கப்போன விஜய் பட நடிகை..

rj balaji

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது தன்னை கிண்டல் செய்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, தனக்கு கார் ஓட்ட தெரியாததால் காரை கயிறு கட்டி இழுத்து சென்றனர். அப்போது படக்குழுவில் இருந்த யாரோ ஒருவர் ” ஏய் யாருப்பா நீ…? கார் ஓட்ட தெரியாதவன்லா நடிக்க வந்திட்டாங்க என கிண்டல் அடித்தனர். அதற்கு உடனே நான், ” அவன் அவன் நடிக்க தெரியாமலே நடிக்க வராங்க போவியா என கூறி அவரை ஆப் செய்துவிட்டேன். உடனே அங்கிருந்த அனைவரும் கைதட்டி சிரித்தனர் என நகைச்சுவையோடு கூறினார்.

https://twitter.com/chettyrajubhai/status/1443917047352545288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1443917047352545288%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Frj-balaji-criticized-for-not-knowing-how-to-drive-a-car-in-shooting-spot%2F

google news
Continue Reading

More in Cinema News

To Top