என் அப்பாவை பத்தி பேச ஒண்ணுமே இல்லை!.. ஆர்ஜே பாலாஜி குடும்பத்துல இவ்ளோ பிரச்சனையா?..
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சிங்கப்பூர் சலூன் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வேறு பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், நல்ல வசூல் ஈட்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இதில், ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வரும் மீனாக்ஷி செளத்ரி நடித்துள்ளார். சத்யராஜ், லால், ஜான் விஜய், கிஷன் தாஸ் என பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்சேதுபதி படம் வேலைக்கு ஆகல!.. டோலிவுட் பக்கம் நைஸாக ஒதுங்கிய மிஸ் இந்தியா!.. யாரு படம்னு பாருங்க!
முதல் பாதி முழுக்க சுன்னத் காமெடி, சத்யராஜின் சரக்கு காமெடி என படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சீரியஸாகவும் கருத்துக்களை நோக்கிய படமாகவும் நகர்ந்து நல்ல கிளைமேக்ஸ் உடன் சுபம் போடுகிறது.
சிங்கப்பூர் சலூன் படம் வெற்றியடைந்த நிலையில், மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில், அளித்த ஒரு பேட்டியில் உங்க அப்பா பற்றி சொல்லுங்க என தொகுப்பாளினி கேட்க, என் அப்பாவை பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்றும் சிறு வயதிலேயே தங்கள் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா!.. இந்த டைம்ல இப்படியெல்லாம் நடிக்கணுமா செல்லம்!..
மூக்குத்தி அம்மன் படத்தின் கதை தான் ஆர்ஜே பாலாஜியின் சொந்த வாழ்க்கையே. ஓடிப்போன அப்பா, அதிகம் அக்கறை இல்லாத அம்மா, ஒரு தம்பி, 3 தங்கைகள் என ஆர்ஜே பாலாஜி வாழ்க்கையில் பல சோகங்கள் நிறைந்துள்ளன. ஆர்ஜே பாலாஜியின் குடும்பத்தை காப்பாற்றி வந்ததே அவரது தாத்தா மற்றும் பாட்டி தானாம்.