மயில்சாமி ஒரு விஷயம் பண்ணார்!. ஆடிப் போயிட்டேன்!.. ஆர்.ஜே.பாலாஜி சொன்ன செம மேட்டர்!..

by sankaran v |   ( Updated:2024-11-27 03:55:43  )
mayilsamy rj balaji
X

mayilsamy rj balaji

எந்த ஒரு உதவியும் வெளியில் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒருவருக்கு உதவி செய்துவிட்டு அதை வெளியில் சொல்லி விளம்பரப்படுத்துவதில் பிரயோஜனமே இல்லை. அது விளம்பரத்துக்காக செய்த மாதிரி ஆகி விடும். இதனால் தான் பல பெரியவர்களும் வெளியில் தெரியாமல் உதவி செய்வார்கள்.

மிமிக்ரி கலைஞர் மயில்சாமி

இதற்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் கொடுக்கணும்னு சொல்வாங்க. இன்னொரு விஷயமும் சொல்வாங்க. இடது கையில் இருந்து வலது கைக்குள் மாறுவதற்குள் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காக இடது கையாலேயே தானம் செய்தாராம் ஒரு வள்ளல். அந்த வகையில் மறைந்த பிரபல காமெடி, மிமிக்ரி கலைஞர் மற்றும் குணச்சித்திர நடிகருமான மயில்சாமி மிகவும் இளகிய மனதுக்காரர்.

Also read: பாரதிராஜா படத்தில நடிக்கறது எவ்ளோ பெரிய விஷயம்..! ஷோபனா மறுக்க என்ன காரணம்?

ஆர்.ஜே.பாலாஜி

அவரிடம் வந்து யாராவது கஷ்டம்னு சொல்லிக் கேட்டா தாராளமாக உதவி செய்பவர் என்றும் அவர் மறைந்த போது பல செய்திகள் வெளியானது. தற்போது பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவரைப் பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

ஒரு நாள் நானும் மயில்சாமி அண்ணனும் ஒரு வேலை விஷயமா கார்ல போய்ட்டு இருக்கோம். அந்தப் பக்கம் ரோடு போட்டுட்டு இருக்காங்க. வண்டியை ஓரமா நிறுத்தச் சொல்லி சைடுல ஒரு பேக் வச்சிட்டு இருந்தாரு மயில்சாமி அண்ணன்.

mayilsamy

mayilsamy

அதுல இருந்து பணத்தை எடுத்து அங்க வேலை செஞ்சிட்டு இருந்த எல்லாருக்கும் 500 ரூபா கொடுத்துட்டு ஓகே பைன்னு சொல்லிட்டு வந்துட்டாரு.

உதவ ஆரம்பிச்சிட்டேன்...

நான் ஏன்னு கேட்டேன். அங்க பாருங்க. எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. அப்படி சொன்னாரு. அதைப் பார்த்து நானும் எப்பவும் பாக்கெட்ல காசு வெச்சிட்டு இருப்பேன். அவரை மாதிரி உதவ ஆரம்பிச்சிட்டேன் என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இதைப் பார்க்கும்போது கமல் அன்பே சிவம் படத்துல சொல்ற டயலாக் தான் நினைவுக்கு வருது. நல்லது செய்யணும்கற அந்த மனசு இருக்கு பாரு. அதான் கடவுள்னு படத்துல மாதவன்கிட்ட சொல்வாரு. அந்த வகையில மயில்சாமி மறைந்ததும் தான் அவரைப் பற்றி ஒவ்வொரு நல்ல விஷயங்களும் வெளியில் தெரிகிறது.

Also read: Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே

எம்ஜிஆரின் வழி

பிரபல நடிகர் பாவா லட்சுமணன் சுகரால் பாதிக்கப்பட்டு மாத்திரை வாங்க கூட வழியில்லாமல் கஷ்டப்பட்ட சமயத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு பேருதவியாக இருந்தவர் மயில்சாமி தான். அவர் இருக்கும் வரை மாதா மாதம் அவருக்கு பணம் அனுப்பிக் கொண்டே இருந்தாராம்.

மயில்சாமியைப் பொருத்தவரை எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்று எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்து விட்டார்.

Next Story