என் வாழ்க்கையில முக்கியமானவன் நீதான்!.. விஜயகாந்தே நெகிழ்ந்து சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?...

by சிவா |
vijayakanth
X

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். விஜய ராஜாவாக சினிமாவுக்கு வந்து முதல் படத்தில் இயக்குனரால் விஜயகாந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டவர். துவக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் வசூலை குவிக்கவில்லை.

ஆனாலும், நம்பிக்கையுடன் காத்திருந்த அவருக்கு இயக்குனர் எஸ்.ஏ.சி கிடைத்தார். அவரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் பெரிய வெற்றியை பெற்று விஜயகாந்தை கவனிக்க வைத்தது. அதன்பின்னரே சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விஜயகாந்தை வைத்து படமெடுக்க முன்வந்தனர்.

இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..

சினிமாவில் பல நடிகர்களுக்கும் அமையாத பல விஷயங்கள் விஜயகாந்துக்கு அமைந்தது. அவரின் படங்களுக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்ராஹிம் ராவுத்தர் எனும் நல்ல அக்கறை உள்ள ஒரு நண்பன் அவருக்கு கிடைத்தார். விஜயகாந்த் நடிக்கும் படங்கள், அவரின் சம்பளம், கதை என எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொண்டார்.

அதேபோல், விஜயகாந்தை படங்களில் எப்படி புரமோட் செய்ய வேண்டும் என்பதையும் அவரே முடிவெடுத்தார். விஜயகாந்த் என்றால் ஆக்‌ஷன் ஹீரோ என்கிற இமேஜை உருவாக்கியவர் அவர்தான். எம்.ஜி.ஆர் பாணியில் காட்சிகள் மற்றும் கதைகளில் விஜயகாந்தை நடிக்க வைத்து மக்களிடம் சேர்த்தது அவர்தான்.

இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

அதேபோல், விஜயகாந்த் பல ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும் புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. அதற்கு காரணம் விஜயகாந்துக்கு திருமணம் முடிந்தநிலையில் வெளியான படம் புலன் விசாரணை. அப்போது விஜயகாந்த் தொடர் தோல்விகளை கொடுத்து வந்தார். புலன் விசாரணை படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. திருமணம் முடிந்த நேரத்தில் அது விஜயகாந்துக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மேலும், எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், பிரபு போன்ற நடிகர்களின் 100வது படம் ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் வசூலை வாரி குவித்தது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியது ஆர்.கே.செல்வமணிதான். எனவே, அவரிடம் ‘நீ என் வாழ்க்கையில் முக்கியமானவன்’ என சொல்லி நெகிழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். இந்த தகவலை ஆர்.கே.செல்வமணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story