நல்ல மனுஷன்யா.! அஜித் தீவிர ரசிகராக இருந்தாலும் விஜய்க்கு தான் ஃபுல் சப்போர்ட்.!
திரைபிரபலன்கள் , வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் தங்கள் இளம் வயதில் நான் அஜித் ரசிகர் , விஜய் ரசிகர், ரஜினி ரசிகர் என கூறிக்கொண்டு இருந்தாலும் ஒரு அளவுக்கு வளர்ந்த பின்னர், அது மாதிரியான கேள்விகளில் இருந்து தப்பித்து, அஜித்தா விஜயா என கேட்டால் மழுப்பலான பதிலை கூறிவிட்டு பறந்துவிடுவர்
ஆனால் தான் வளரும் போது என்ன கூறினேனோ, அதே தான் இப்போதும் என கூறுபவர்கள் ஒரு சிலரே. அப்படி ஒருவர் தான் ஆர்.கே.சுரேஷ். இவர் எங்கு எந்த மேடை, எந்தபேட்டி என்றாலும் அஜித் ரசிகர் தான் என கெத்தாக கூறும் குணம் கொண்டவர்.
தான் அஜித் ரசிகர் என்பதை காட்டிக்கொள்ளவே, பில்லா பாண்டி எனும் திரைப்படத்தில் நடித்தவர் இவர். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் , நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் குறிப்பாக 100 கோடி எல்லாம் வாங்குகிறார்கள். இதனால் மீதி பணத்தில் தான் படம் எடுக்க வேண்டியுள்ளது என விஜயை குறிவைத்தது கேட்டதாக தெரிகிறது.
இதையும் படியுங்களேன் - அனுபமாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.?! ரசிகர்கள் செயலால் தர்ம சங்கடமான 'அந்த' சம்பவம்.!
இதனை புரிந்து கொண்ட ஆர்.கே.சுரேஷ், ' நடிகர்களின் சம்பளம் அவர்கள் முடிவு செய்வதில்லை. அது அவர்கள் வியாபாரம் சமபந்தப்பட்டது. குறிப்பாக விஜய் சாருக்கு கேரளாவில் 6.5 கோடி வியாபாரம் இருக்கிறது. கர்நாடகாவில் 8 கோடி, ஆந்திராவில் 5,6 கோடி, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 25 கோடி , தமிழக தியேட்டர் உரிமை 65 கோடி, அதற்கடுத்து வெளிநாடு, சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் என கிட்டத்தட்ட 250 கோடி பிசினஸ் உள்ள நடிகர் 100 சம்பளம் வாங்க தான் செய்வார் . ' என விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகருக்கு சப்போர்ட்டாக விஜய் வியாபாரத்தை வைத்தே பதில் கூறி அசத்திவிட்டார்.