More
Categories: Cinema News latest news

பத்து நிமிஷத்துல பாடி வருதுன்னு சொன்னாங்க!.. குடும்பத்தோட அழுதோம்!.. ரோபோ சங்கர் உருக்கம்!..

நடிகர் விமல் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் மேடையில் உருக்கமாக பேசிய வீடியோ காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.

உடல்நலக் குறைவால் உடல் எடை முற்றிலும் மெலிந்து பார்க்கவே பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்ட ரோபோ சங்கர் உயிரிழந்து விட்டதாக சில யூடியூப் சேனல்களில் பரப்பப்பட்ட போலியான வீடியோக்கள் தன்னையும் தனது குடும்பத்தையும் பல இரவுகள் தூங்க விடாமல் அழ வைத்துள்ளது என பேசினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: 500 கோடி வசூல் செஞ்சா இது நல்ல படமா?.. ஜெயிலரை துவச்சி காயப்போட்ட தங்கர் பச்சான்..

பத்து நிமிஷத்துல பாடி வருதுன்னு சொன்னாங்க:

பாடி வருது, பத்து நிமிஷத்துல பாடி வந்துடும், மறைந்தார் ரோபோ சங்கர், ரோபோ சங்கர் மரணம், சோகத்தில் கதறிய குடும்பம் என்றெல்லாம் யூடியூப் வீடியோக்கள் போலியாக வெளியானது மனதை ரொம்பவே பாதித்தது.

நான் கடுமையாக 6 மாத காலம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில், தனிமையில் வாடிய நாட்களில் இருந்து வெர்ஷன் 2.0வாக மீண்டு வந்த நிலையில், சினிமாவில் உள்ள சிலரே போன வாரமே போயிருப்பன்னு நினைச்சேன். இன்னும் நீ சாகலையான்னு என்கிட்டேயே கேட்கிறாங்க, அந்த அளவுக்கு மக்களை நகைச்சுவையால் மகிழ்வித்த ஒரு கலைஞனுக்கு இந்த சமூகத்தில் உள்ள சிலர் இப்படிப்பட்ட கொடுமைகளை கொடுப்பது எல்லாம் ரொம்பவே தப்பு.

இதையும் படிங்க: கமல், இளையராஜா சொல்லியும் நடிகையிடம் டெரர் காட்டிய பாலா!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

குடும்பமே கஷ்டப்பட்டது:

அந்த வீடியோக்களை எல்லாம் பார்த்து என் குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டாலும், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளமால், எப்படியாவது இதிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும். அவர்களுக்கு என் படங்களின் வாயிலாக பதில் சொல்ல வேண்டும் என்றே முயற்சித்து வருகிறேன் என்றார் ரோபோ சங்கர்.

மேலும், சில கெட்டப் பழக்கங்கள் இருந்தது. அதையெல்லாம் இப்போ டோட்டலா விட்டு விட்டேன். இப்போ நல்ல ஹெல்த்தியான உணவுகள், பழங்கள், காய்கறிகள் உண்கிறேன். ஆரோக்கியமா இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும், அந்த மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு வந்து நடிகர் விமல் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியிருந்தால் எப்படி இருக்கும் என பக்காவாக மிமிக்றி செய்து அசத்தினார். ரஜினி வாய்ஸை தொடர்ந்து பாரதிராஜா குரலிலும் அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

Published by
Saranya M

Recent Posts