
Cinema News
என்னோட இந்த நிலைமைக்கு காரணம் கேப்டன்தான்! ரோபோ யோசிச்சுதான் பேசுனீங்களா?
சின்னத்திரையில் வந்த எத்தனையோ பேர் வெள்ளித்திரையில் தங்களை நிலை நிறுத்தி வருகின்றனர். உதாரணமாக டாப் ஸ்டார் சிவகார்த்திகேயன், சந்தானம், வாணிபோஜன் ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் மிமிக்ரியில் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் இன்று வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்து வருகிறார்.

robo1
எப்படி இருந்த ரோபோ சங்கர்?
ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே மாறினார் ரோபோ சங்கர். மாரி படத்தின் மூலம் தன் நடிப்பை அறிமுகம் செய்த ரோபோ தொடர்ந்து பல முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவையை அள்ளித் தெறிக்க விட்டிருப்பார். ஆரம்பத்தில் பாடிபில்டராக தன் கெரியரை ஸ்டார்ட் பண்ண ரோபோ பெரும்பாலான விழா மேடைகளில் தன் கட்டுமஸ்தான உடம்பை காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தவர்.
அதன் விளைவுதான் விளைவுதான் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து ரோபோவின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவே பாராட்டும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். இதற்கிடையில் திடீரென ரோபோ சங்கரின் உடல் மெலிவான புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

robo2
அதுதான் காரணம்
என்னாச்சு அவருக்கு? என்று கேட்குமளவிற்கு உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதற்கு காரணம் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கிட்டத்தட்ட ஒருவருடம் அது தெரியாமலேயே இருந்ததனால் இடை இடையே மது அளவுக்கதிகமாக குடித்ததனாலும் அது இரத்தில் சேர்ந்து முற்றிய நோயாக மாறிவிட்டது என்ற காரணத்தை அவரது மனைவி கூறினார்.
ஆனால் இப்பொழுது முற்றிலுமாக குணமடைந்து பழைய ரோபோவாக படங்களில் காண்பீர்கள் என்றும் கூறினார். இந்த நிலையில் மாரி படத்தில் நடிக்கும் போது மிகவும் குண்டாக இருந்த ரோபோ அதன் பிறகு வந்த படங்களில் ஒல்லியாக காணப்பட்டார். ஏன் வெயிட் லாஸ் பண்ணீங்க என்று கேட்டதற்கு அவரை எல்லாரும் ஒரு மினி கேப்டன் என்றே அழைத்தார்களாம்.

robo3
ரோபோ சங்கரின் நடை , உடல் என எல்லாமே பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரியே இருந்ததனால் அது நம் உண்மைத்தன்மையை மறைத்து விடும் என்ற காரணத்தினாலேயே உடலை குறைத்தேன் என்று ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : 16 வயது மாணவன்!.. சிம்ரன் நடித்த படம்… அதோட மார்க்கெட் காலி!..