ஆண்டவர் படம் வந்தாலே எல்லோருக்கும் ஒரு ஜெர்க் வந்து விடும்....!!! தீவிர கமல் ரசிகன் ரோபோ சங்கர்

by sankaran v |   ( Updated:2022-09-09 18:04:07  )
ஆண்டவர் படம் வந்தாலே எல்லோருக்கும் ஒரு ஜெர்க் வந்து விடும்....!!! தீவிர கமல் ரசிகன் ரோபோ சங்கர்
X

Robosankar2

பெயர் ரோபோசங்கர். செல்லப்பெயர் ரோபோ. இவரது சொந்த ஊர் மதுரை. 24.12.1978ல் பிறந்தார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து வந்தார். தற்போது நடிகராக உள்ளார். பொருளியலில் முதுகலைப்பட்டம் படித்துள்ளார். மாரி படத்தில் நடித்துள்ளார். பிரியங்காவை மணம் செய்துள்ளார். இவரது மகள் இந்திரஜா.

robosankar

இவர் கமலின் தீவிர ரசிகர். விக்ரம் படத்திற்கு தியேட்டரில் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி கமலுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டாடி இருக்கிறார். தொடர்ந்து 10 தியேட்டர்களில் படம் பார்த்து இப்ப உள்ள ரசிகர்களுக்கு அப்போ உள்ள ரசிகர்கள் எந்த மாதிரியாக கமல் பட வெளியீட்டிற்குக் கொண்டாட்டம் இருந்தது என்பதைக் காட்டும் விதத்தில் திரையரங்கைத் திருவிழாவாக மாற்றியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பே கமலைப் போல காஸ்டியூம் ரெடி பண்ணி டான்ஸ் ரிகர்சல் பார்த்து ரிலீஸ் அன்று தியேட்டரில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் இவ்வாறு பேசுகிறார். இந்த பான் இண்டியா படம் என்று சொல்கிறார்களே அதை எல்லாம் தாண்டி ஆண்டவர் படம் ஆல் இண்டியாவாகி விட்டது. ட்ரிபிள் ஆர், கேஜிப் எல்லாம் மற்ற மொழிகளில் பிரம்மாண்டமாக எடுத்து மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளார்களே...தமிழில் அப்படி என்ன படம் இருக்கிறது என்று கேட்பவர்களின் வாயை அடைத்து விட்டார் ஆண்டவர் கமல்.

அவரது படம் 4 வருஷம் கழித்து வந்துள்ளது. 4 வருஷம் மட்டும் அல்ல. இன்னும் 40 வருஷம் கழித்து வந்தாலும் ஆண்டவர் படம் வந்தாலே எல்லோருக்கும் ஒரு ஜெர்க் வந்து விடும். அவரை முதன் முதலாக சந்தித்தது மறக்க முடியாதது.

Roboshankar4

ஆழ்வார் பேட்டை ஆபீசிற்கு காரை எடுத்துச் செல்கிறேன். அப்போது அங்கிருந்து ரெண்டு ஜப்பானியர் மாதிரி செக்யூரிட்டீஸ் வந்து கத்துனாங்க. சார் தான் அப்பாய்ன்மெண்ட் கொடுத்துருக்காங்க பார்க்க போணும்னு சொன்னேன். அதற்கு அவர்கள் போகச் சொல்லிக் கத்துனாங்க. அப்போது பின்னால் இருந்து ஒரு கார் வந்து நிக்குது. அது கமல் சாரோட கார். நான் வேறு அந்த சமயத்தில் காரை ரிவர்ஸ்சும் எடுக்க முடியாது.

என்னடா செய்யறதுன்னு பார்த்து ஒரு நிமிஷம் திகைத்து நின்றேன். அப்போது காரிலிருந்து இறங்கி ஆபீஸிற்குச் செல்கிறார் கமல். சிறிது நேரம் கழித்து நிகில் அண்ணன் வெளியே வந்தாங்க. என்னைப் பார்த்து நீங்க தான் காரை சார் காருக்கு முன்னாடி நிறுத்துனதா...உள்ளே வாங்க. ஒங்களுக்கு இருக்குன்னாரு. அப்புறம் மெதுவா உள்ளே சென்றேன். கமல் சார் என்னைப் பார்த்துக் கேட்குறாரு. என்ன பண்றீங்க. மிமிக்ரி பண்றேன்.

அவர்கள் படத்துல வர்ற மாதிரி மிமிக்ரி செய்யத் தெரியுமான்னு கேட்டாரு. இல்ல சார்னு சொன்னேன். வாயை இப்படி இழுத்துக் குச்சை வச்சிப் பேசணும். கையில பொம்மையை வச்சிக்கிட்டு அது பேசுற மாதிரியும் பேசணும். 2 வாய்ஸ்ல நீங்க இப்படி பேசிக்காட்டுனீங்கன்னா வேர்ல்டு லெவல்ல போகலாம்னாரு. அவரே பேசியும் காட்டினாரு.

Roboshankar, Kamal

ட்ரை பண்றேன் சார்னு சொன்னேன். அப்புறம் போட்டோ எடுக்க மறந்து திரும்பவும் கஷ்டப்பட்டு நிகில் அண்ணன்ட சொல்லி அவரு என் தோள்ல கையைப் போட்டு நிக்கற மாதிரி போட்டோ எடுத்துட்டுப் போனேன். அன்னைல இருந்து உலகநாயகனின் உறவுன்னு என்னை நான் பெருமையா சொல்லிக்கிட்டேன். அவரை எங்க பார்த்தாலும் உரிமையா கேட்டு போட்டா எடுத்துக்குவேன்.

பேமிலியோடவும் இப்படி போட்டா எடுத்திருக்கேன். இந்த கட்ஸ் எல்லாம் கமல் மாதிரி ஏத்திக்கிட்டு அவரை மாதிரி டான்ஸ் எல்லாம் பக்காவா பழகி தியேட்டர்ல இப்ப உள்ள ஆடியன்ஸ்க்கு அப்போ விக்ரம் வந்த போது எப்படி கொண்டாடுனோமோ அதே மாதிரி இப்ப அவங்களுக்கும் தெரியணும்னு அதே மாதிரி லாட்டரி சீட்டை எல்லாமி கிழிச்சி மூடை மூடையாக கட்டி வச்சி, அலங்காரம், கட் அவுட் பேனர்,

ஆரத்தின்னு பிரமிக்க வச்சோம். ஒவ்வொரு தியேட்டர்லயும் மேனேஜர்கிட்ட போய் பேசி ஆண்டவரைத் தரிசிக்க வந்த பக்தர்களுக்கு நன்றின்னு இன்டர்வெல்ல ஸ்லைடு போட்டுக் காட்டச் சொன்னோம். இப்போ சின்ன ஆரத்தி எடுத்திருக்கோம். அடுத்து விக்ரம் 3ல பெரிய ஆரத்தியா எடுப்போம்.

Next Story