தளபதி 69 படம் இப்படித்தான் இருக்கும்!.. அவர் கூட அரசியலில் பயணிக்கவும் ரெடி.. பிரபலம் ஓபன் டாக்!..

Published on: February 8, 2024
---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம் அப்பா, மகன் இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசப் போகிறதா? ஆக்‌ஷன் படமாக இருக்கப் போகிறதா? அல்லது ஹாலிவுட் படமான ஜெமினி மேன் போல வித்தியாசமாக வரப்போகிறதா? என ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆனால், தளபதி 69 படம் கண்டிப்பாக பக்கா அரசியல் படமாகத்தான் இருக்கும் என ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார். அனைத்து ரசிகர்களுக்கான படமாகவும் அதே வேளையில் தனது அரசியல் பயணத்தை அழுத்தம் திருத்தமாகவும் சொல்லும் படமாக தளபதி 69 இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதே வேட்டையனா இருந்தா நிலைமையே வேற!.. காத்து வாங்கும் லால் சலாம் டிக்கெட் புக்கிங்!..

மேலும், அவருடன் அரசியலில் பயணிக்கவும் தான் ரெடி என ஃபேன் பாயாக இருந்த ரேவந்த் சரண் தோழராகவே மாறத்துடிக்கிறார்.  விஜய் அரசியலுக்கு வந்தால் பல இளைஞர்கள் அரசியலை விரும்புவார்கள். அதனை சாக்கடை என சொல்லி யாரும் கடந்து போக மாட்டார்கள். நமக்கும் அரசியலில் பங்கு உள்ளது என்றும் இளைஞர்கள் வந்தால் தான் அரசியலில் நல்ல மாற்றங்கள் வரும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகும் என ரேவந்த் பேசியுள்ளார்.

தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என பேச்சு வார்த்தை எழ காரணமே தமிழக வெற்றி கழகம் என விஜய் அரசியல் கட்சிக்கு பெயர் வைத்திருப்பது தான் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.