பொண்டாட்டி கிட்ட தோத்தாத்தான் வெளியே ஜெயிக்க முடியுமாம்! ரோஜா சொல்றதுல உள்குத்து ஏதாவது இருக்குமோ?

by sankaran v |
roja
X

roja

ஒரு காலகட்டத்தில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நடித்த முதல் படம் செம்பருத்தி. இந்தப் படம் 1992ல் வெளியானது. ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார். பிரசாந்த், ரோஜா, மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி, பானுமதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். இந்தப் படத்தில் தான் ரோஜா அறிமுகம் ஆனார். ஆனால் அபாரமாக நடித்து இருப்பார். அதே நேரம் இந்தப் படத்தில் கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்து இருப்பார்.

நடிகை ரோஜா ஆர்கே.செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2002ல் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரோஜா ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக 2024வரை இருந்தார்.

2011ல் இருந்து தற்போது வரை காங்கிரஸின் யுவசேனா கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 22வது ஆண்டு திருமண விழாவை தம்பதியினர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 21ல் கொண்டாடினர். இப்போது ரோஜா ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க.

நான் தான் எப்பவுமே சண்டை போடுவேன். செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார். கோபம் வந்ததுன்னா சீரியஸா ரூமுக்குள்ள போய் கதவை மூடிப்பார். கோபம் குறைந்ததுக்கு அப்புறம் வெளியே வருவார்.

ஏன்னா அவர் திட்டுனா நான் அழுவேன். அப்புறம் என்னை சமாதானப்படுத்தணும். இதெல்லாம் எதுக்குன்னு அவருக்கு தெரியும். வாழ்க்கையிலே ஜெயிக்கணும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும். வெளியே பொய் ஜெயிக்க முடியாது என்கிறார் நடிகை ரோஜா.

இப்படி ஒரு முன்னுதாரணமா ரோஜா சொன்னா ஊருல எல்லாருமே பொண்டாட்டிகளுக்குப் பயப்பட ஆரம்பிச்சிடுவாங்க. ஏற்கனவே இன்னைக்குப் பல பேரு வீட்ல அதான் நடந்துகிட்டு இருக்கு. இதுல இவங்க வேற சொல்லணுமா? இதுல ஏதாவது வேற உள்குத்து இருக்குமோன்னு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story