Connect with us

Cinema News

ரோலக்ஸா? ஏஜென்ட் விக்ரமா? லியோ படத்தில் இதுல யாரு கேமியோவா வந்தா கலக்கலா இருக்கும்?..

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவா? இல்லையா? என ஏகப்பட்ட சந்தேகங்கள் கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், ஏகப்பட்ட டீகோடிங்கையும் செய்து வந்தனர்.

நடிகை த்ரிஷாவின் சத்யா பெயர் வரை டீகோட் செய்த நிலையில், தற்போது தியேட்டரில் படம் பார்க்கும் வரை அந்த சுவாரஸ்யத்தை லோகேஷ் கனகராஜ் கடத்த நினைத்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் லியோவுக்கு எல்சியூ ஹாஷ்டேக் போட்டு அம்பலப்படுத்தி விட்டார்.

இதையும் படிங்க: லியோ படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன உதயநிதி.. கூடவே அந்த கட்டுச்சோத்தையும் அவுத்துட்டாரே?..

கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா, விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என ஏற்கனவே ஸ்டார் பட்டாளங்கள் நிறைந்து காணப்படும் எல்சியூவில் தற்போது லியோ தாஸாக தளபதி விஜய்யும் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

அந்த முதல் 10 நிமிட காட்சி ஹைனாவின் காட்சி இல்லை என்றும் எல்சியூவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் ஃபேன் மேடு வீடியோக்களை போட்டு வந்த நிலையில், 3000 பேரின் உழைப்பு இதுவரை எல்சியூவில் பணியாற்றியவர்களின் உழைப்பை குறிக்கவே லோகேஷ் சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் தற்போது கணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே படத்துல ஒன்னா நடிச்சு கல்யாணம் செய்த காதல் ஜோடிகள்! ஆல் டைம் ஃபேவரைட் அஜித்-ஷாலினி இல்லாமலா?

இந்நிலையில், தானோஸ் போல தாறுமாறான வில்லன் ரோலக்ஸ் என்கிற நிலையில், லியோ படத்தில் விஜய் மற்றும் ரோலக்ஸ் இடம்பெறும் ஒரு காட்சி அல்லது ஒரு போன் உரையாடல் இருந்தாலே தியேட்டரே தெறிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

மேலும், கமல்ஹாசனின் கேமியோ கிளைமேக்ஸில் இடம்பெற்றால் அல்டிமேட்டா இருக்கும் ஆண்டவரே என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே, நெப்போலியன், ஏஜென்ட் டீனா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதை முன்பே ரசிகர்கள் கண்டுபிடித்த நிலையில், அது எல்லாமே எல்சியூ கனெக்டாகத்தான்  இருக்கும் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. கைதி டில்லி, அடைக்கலம் உள்ளிட்டோர்களும் வருவார்களா? என பல வித எதிர்பார்ப்புகள் தற்போது லியோ படத்தின் மீது எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top