தாவணி பாவாடை சும்மா அள்ளுது!...சுண்டி இழுக்கும் அழகில் கண்ணம்மா நடிகை....
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு வரும் என அவர் காத்திருந்தார்.
ஆனால், எந்த இயக்குனரும் நடிக்க அழைக்கவில்லை. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு பொழுது போக்கி வருகிறார். ஒருபக்கம், தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், தாவணி, பாவாடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.