பாகுபலி ராசி பார்க்கும் RRR படக்குழு.! இது சரியா வருமா.! திகைக்கும் தியேட்டர்கள்.!
இத்திரைப்படத்தில் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க கதாநாயகிகளாக ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரிஸ் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 1920களின் வரலாற்றில் இரண்டு போர்வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக் இப்படத்தில் வைத்துள்ளாராம் ராஜமௌலி.
டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ள இப்படம் கிட்டத்தட்ட 14 மொழிகளில் வெளியாகும் இப்படம் அனைத்து ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், RRR திரைப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக வேண்டியது. ஆனால், அதுவும் பல காரணங்களால் அன்றைய தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இவ்வாறு தள்ளி வைக்கப்பட்ட பெரிய படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும்.? மேலும் ஏப்ரல்-மே காலகட்டத்தில் ரிலீசாக உள்ள பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நிலைமை என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அந்த வகையில், RRR திரைப்படம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து விட்டது. அதாவது வருகின்ற மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 அன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அநேகமாக RRR திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறுகிறார்கள். அதாவது பாகுபலி 2 திரைப்படம்ஏப்ரல் 28இல் தான் வெளியானது. வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. அதே போல இந்த RRR திரைப்படத்தையும் ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.