ஜெயலலிதாவை கிண்டல் செய்து கண்ணதாசன் எழுதிய பாடல்… ஓஹோ இப்படியெல்லாம் நடந்துருக்கா??

Kannadasan
1967 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஊட்டி வரை உறவு”. இத்திரைப்படத்தை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். கோவை செழியன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

Ooty Varai Uravu
இத்திரைப்படம் சிவாஜி கணேசனின் கேரியரில் மிக கலகலப்பான திரைப்படமாக அமைந்தது. அக்காலகட்டத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதில் உள்ள அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார்.
குறிப்பாக இதில் இடம்பெற்ற “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்” என்ற பாடல் இப்போதும் மிகப் பிரபலமான பாடலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடலின் உருவாக்கத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் இருந்ததாக இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு வதந்தி பரவியதாம்.

Kannadasan
அதாவது “ஊட்டி வரை உறவு” திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது ஜெயலலிதாவாம். சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடனமாடுவது போல ஒரு பாடலும் படமாக்கப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் “ஊட்டி வரை உறவு” திரைப்படத்தில் இருந்து ஜெயலலிதா விலகிவிட்டாராம். அதன் பிறகுதான் கே.ஆர்.விஜயாவை அந்த கதாப்பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம் இயக்குனர் ஸ்ரீதர்.
ஆதலால்தான் “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்” என்று ஜெயலலிதாவை கேலி செய்வது போல் கண்ணதாசன் அந்த வரிகளை எழுதியிருந்தார் என அக்காலகட்டத்தில் ஒரு வதந்தி பரவியதாம்.
இதையும் படிங்க: இது சிவக்குமார் ஹீரோவா நடிச்ச படம்… ஆனால் எங்க தேடுனாலும் அவர் இருக்கமாட்டாரு… ஏன் தெரியுமா??

Jayalalithaa
இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் “இந்த விஷயம் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை. ஆனால் இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் இந்த பாடலை குறித்து இவ்வாறுதான் பேசப்பட்டது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.