விஜய் பற்றி பரவிய வதந்தி… அப்போ அது உண்மை கிடையாதா?? அடப்பாவமே!!
தமிழின் முன்னணி இயக்குனராக திகழும் அட்லி, தனது முதல் திரைப்படமான “ராஜா ராணி” திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனராக திகழ்ந்தார். அதன் பின் விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பின் அட்லி, தமிழின் மாஸ் இயக்குனராக அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி, ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு “ஜவான்” என பெயர் வைத்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார்.
“ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவருகிறது. நயன்தாரா பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் , அவர் பாலிவுட்டில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளிவந்தது. இத்தகவல் ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டத் தகவல்தான் எனவும் கூறிவந்தனர்.
அதனை தொடர்ந்து “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடிகர் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. இத்தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது “ஜவான்” திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் ஒரு வதந்தி என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விஜய் இதற்கு முன் பாலிவுட்டில் அக்சய் குமார் நடித்த “ரவுடி ரத்தோர்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கேமியோ ரோலில் வந்து நடமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.