Cinema History
விஜயகாந்தை பார்க்க போன இயக்குனர் பாடிய பாட்டு!.. ஞாபகம் வந்து கண்கலங்கிய கேப்டன்..
Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலிலும் நுழைந்தார். அதில், படிப்படியாக முன்னேறி எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.
ஆனால், உடல்நிலை பாதிப்பால் மெல்ல மெல்ல அவரின் பேச்சு குளறியது. ஞாபக மறதி ஏற்பட்டது. தைராய்டு காரணமாக குரல் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல பேசும் திறமையையும் இழந்தார். ஆக்டிவாக அவரால் செயல்பட முடியவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவர் அரசியல் சினிமா என இரண்டிலுமே ஆக்டிவாக இல்லை.
இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா படங்களை காலி செய்த விஜயகாந்த்!.. கலெக்ஷன் கிங்காக இருந்த கேப்டன்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய இடத்தை அவர் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வந்த உடல்நல பாதிப்புகள் அதற்கு எமனாக வந்தது. பல வெளிநாடுகளிலும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால், பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இப்போது பேசவோ, எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் இருக்கிறார்.
அதைவிட சோகம் என்னெவெனில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் அருகில் யார் நிற்கிறார் என்பதை கூட புரிந்துகொள்ள முடியாதவராக விஜயகாந்த் இருப்பதுதான் அவரின் ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இப்போது வரை சிகிச்சை நீடித்து வருகிறது. அவர் நலம் பெறவேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..
ஒரு சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த வைத்து சின்ன கவுண்டர் படத்தை இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் அவரை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால், யாரையும் அவரால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. தன் அருகில் இருப்பவர்கள் யார் என்பதை அவரால் உணர முடியவில்லை.
அப்போது ஆர்.வி.உதயகுமார் விஜயகாந்தின் கையை பிடித்துக்கொண்டு சின்ன கவுண்டர் படத்தில் இடம் பெற்ற ‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே’ பாடலை பாடியிருக்கிறார். அவர் பாட பாட விஜயகாந்துக்கு வந்திருப்பது உதயகுமார் என்பது தெரிகிறது. ஆனால், அவரால் பேசமுடியவில்லை. எனவே, கண்களில் நீர் கசிந்ததாம். இந்த தகவலை ஆர்.வி.உதயகுமாரே ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…