கேட்டதும் கொடுத்த ரஜினி! கேட்காமல் வந்து உதவி செய்த அஜித்.. ஆர்.வி.உதயகுமார் சொன்ன ப்ளாஷ்பேக்
RV Uthayakumar: 90 காலகட்டத்தில் கிராமத்து மண்வாசனை உடன் கூடிய படங்களை எடுப்பதில் மிகவும் பிரபலமானவர் ஆர்வி உதயகுமார். இப்போது இருக்கும் பெரிய பெரிய நடிகர்களின் டாப் லிஸ்ட் படங்களை எடுத்துக் கொண்டால் ஆர்வி உதயகுமார் இயக்கிய படங்கள் கண்டிப்பாக அவர்கள் ஹிட் வரிசையில் இடம் பெற்று இருக்கும் .
ரஜினிக்கு எஜமான், விஜயகாந்த் க்கு சின்ன கவுண்டர், கார்த்திக்கு கிழக்கு வாசல், கமலுக்கு சிங்காரவேலன் என ஒரு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் .அது மட்டும் அல்லாமல் கார்த்திகை வைத்து பல படங்களை இயக்கியிருக்கிறார் ஆர்வி உதயகுமார் .தற்போது ஆர் வி உதயகுமார் இயக்குனர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: திணறிய கண்ணதாசன்!. தட்டித் தூக்கிய அந்த இளைஞன்!.. வியந்து போன எம்.எஸ்.வி!..
இந்த சங்கத்தில் சுமார் 2500 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு மேடையில் ரஜினியையும் அஜித்தையும் பற்றி ஆர்.வி உதயகுமார் பேசியது சோசியல் மீடியாக்களில் பெரும் வைரலாகி வருகின்றது. ரஜினிகாந்திடம் ஒரு முறை இயக்குனர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களின் நிலைமையை அவரிடம் கூறி ஏதாவது உதவி செய்யும்படி கேட்டிருந்தார்களாம்.
அது மட்டும் அல்லாமல் மொத்தம் 2500 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 2000 பேர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 500 பேர் ஏதோ சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என அடுக்கடுக்காக எண்ணிக்கை வாரியாக கூறிக்கொண்டே போக உடனே ரஜினி ஏதாவது ஒரு நம்பரை கொடுங்கள். அது அந்த நம்பருக்கு பணத்தை அனுப்பி விடுகிறேன் என கூறினாராம்.
இதையும் படிங்க: சலார் வசூல் சாதனையை முறியடித்த கல்கி… 7 நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?..
இதைக் கேட்ட ரைட்டர் அசோசியேசனும் நாங்களும் கஷ்டத்தில் இருக்கிறோம் என சொல்ல அவர்களுக்கும் சேர்த்து ரஜினி உதவி செய்ததாக ஆர்வி உதயகுமார் கூறினார். அது மட்டுமல்லாமல் கேட்டதும் அந்த நேரத்தில் உதவி செய்தார் ரஜினி. ஆனால் கேட்காமலேயே உதவி செய்தவர் அஜித் என ரஜினியையும் அஜித்தையும் பாராட்டி அந்த மேடையில் பேசினார்.
ஆனால் சமீபகாலமாக நடிகர்கள் ஒரு படத்தில் கமிட்டானதும் அட்வான்ஸை வாங்கிக்கொண்டு அதை ஏதோ ஒரு பிசினஸில் இன்வெஸ்ட் செய்து விடுகிறார்கள். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை என்றும் கூறினார் ஆர்வி உதயகுமார்.
இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்!