ஐயோ பாவம்... இடியாப்ப சிக்கலில் எஸ்.ஜே.சூர்யா... மெல்லவும் முடியல அந்த சம்பவத்தை சொல்லவும் முடியல...

by Manikandan |   ( Updated:2022-09-02 08:15:00  )
ஐயோ பாவம்... இடியாப்ப சிக்கலில் எஸ்.ஜே.சூர்யா... மெல்லவும் முடியல அந்த சம்பவத்தை சொல்லவும் முடியல...
X

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது குறிக்கோள் நடிப்பது மட்டுமே என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு இயக்கத்தில் இரண்டு மிகப்பெரும் வெற்றிகளை கொடுத்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

கதாநாயகன் மட்டுமல்லாமல் தற்போது வில்லன் வேடத்திலும், குணசித்திர வேடத்திலும் எஸ்.ஜே.சூர்யா கலக்கி வருகிறார். இயக்குனர்களே போதும் என்று கூறினாலும் தனக்கு ஓகே என்றால் தான் அந்த டேக் ஓகே. அப்படிப்பட்ட எஸ்.ஜே.சூர்யா அண்மையில் நயகனாக நடித்த கடமையை செய் எனும் திரைப்படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் படுதோல்வி அடைந்தது.

இப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரிலீஸ்க்கு முந்தைய நாள் வரை இருந்தது. ஏனென்றால் படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவிற்கு 75 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி. அதேபோல பைனான்சியர்களுக்கு இரண்டு கோடிக்கும் அதிகமாக கடன் பாக்கி இருந்துள்ளது. ஆதலால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருந்துள்ளது.

இதையும் படியுங்களேன் - நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!

அந்த சமயம் ஒரு முன்னணி டிவி சேனல் நிறுவனம் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறவே, பைனான்சியர்கள் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்மதம் தெரிவித்து இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.

முதல் நாள் இந்த திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் அந்த முன்னணி டிவி சேனல் நிறுவனம் பின்வாங்கி விட்டது. இதனால் தயாரிப்பாளர் பைனான்சியர்களுக்கு காசு கொடுக்க முடியாமல் திணறி உள்ளார்.

இதையும் படியுங்களேன் - சிம்பு படத்திற்கு பெரிய ஆபத்து.. கொண்டாட்டத்தில் சினிமா ரசிகர்கள்... விவரம் உள்ளே...

அந்த படத்தின் சாட்டிலைட் வாங்கி உரிமத்தை வாங்குவதாக கூறிய முன்னணி சேனல் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் ஆதலால் அந்த நிறுவனத்தையும் ஒன்றும் கூற முடியாது. எப்படி என்ன செய்வது என்று தெரியாமல் தனது 75 லட்சம் ரூபாய் சம்பளத்தை எப்படி யாரிடம் கேட்டு வாங்குவது என தெரியாமல் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல் முனங்கி வருகிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

Next Story