Cinema History
எஸ்.பி.பி. செய்த வேலை.. கோபித்துக்கொண்டு வெளியேறிய எஸ்.ஜானகி!.. இப்படியா பண்ணுவாரு!..
ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கருப்பு வெள்ளை காலம் முதலே சினிமாவில் பட துவங்கியவர் இவர். துவக்கத்தில் எம்.எஸ்.வியின் இசையில் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.
ஹோட்டல் ரம்பா என்கிற படத்தில்தான் முதன் முதலாக பாடினார். ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் 3 பாடல்களை பாடி இருந்த அவருக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான அடிமைப்பெண் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அவர் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார்.
இதையும் படிங்க: அவரை போல யாரும் இல்லை!.. எஸ்.பி.பி பற்றி பாடகி சித்ரா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!..
டைபாய்டு காய்ச்சல் வரவே எம்.ஜி.ஆர் பாடலை பாட ஒத்திகைக்கு அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு மாதம் எஸ்.பி.பி-க்காக எம்.ஜி.ஆர் காத்திருந்தார். அப்படி உருவான பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அதன்பின் இளையராஜாவின் காலம் வந்தபோது அவரின் இசையில் பல நூறு பாடல்களை பாடினார் எஸ்.பி.பி.
70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல் லிஸ்ட்டில் இவர்களின் கூட்டணியில் உருவான பாடல்தான் இப்போதும் இருக்கிறது. எஸ்.பி.பி பாடும்போது பல குறும்பு வேலைகளை செய்வார். இவருடன் பாடும் போது பின்னணி பாடகி எஸ்.ஜானகியும், சித்ராவும் சிரமப்படுவார்கள். ஏனெனில், சோக பாட்டு பாடும்போது கூட எதையாவது செய்து சிரிக்க வைத்துவிடுவார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…
பின்னணி பாடகி எஸ்.ஜானகி எப்போதும் தனது கையில் ஒரு சின்ன டைரியும், கர்ச்சிப்பும் வைத்திருப்பார். பாடல் வரிகளை அந்த டைரியில்தான் எழுதி இருப்பார். ஒருமுறை அவர் பாடிகொண்டிருக்கும்போது கர்ச்சிப்பை பிடித்து இழுத்துவிட்டார் எஸ்.பி.பி. இதனால் கவனம் சிதறி பாடாமல் நின்றார் ஜானகி.
மற்றொரு முறை இதுபோல எஸ்.பி.பி சேட்டை செய்ய கோவித்துகொண்டு ‘நான் பாட மாட்டேன்’ என சொல்லிவிட்டு போய் தனது காரில் ஏறிக்கொண்டார் ஜானகி. காரின் அருகே போய் எஸ்.பி.பி அழைத்தும் அவர் வரவில்லை. அதன்பின் ஒரு பேனா பேப்பரை காட்டி ‘ஆட்டோகிராப் போடுங்கள்’ என எஸ்.பி.பி கேட்க சிரித்துகொண்டே வெளியே வந்தார் ஜானகி. இப்படி பல சேட்டைகளை செய்தவர்தான் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.