பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள சலார் திரைப்படம் 3 நாட்களில் 402 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவை தவிர மற்ற மாநிலங்களில் சலார் படம் பெரிதாக ஓடவில்லையே என்றே கூறுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்தை ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்துச் சென்று பார்த்தது போல பார்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகவே தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை கூட தமிழ்நாட்டில் சலார் படத்துக்கு பல திரையரங்குகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான இருக்கைகளே நிரம்பிய நிலையில், தற்போது கடந்த வாரம் வெளியான அசோக் செல்வனின் சபாநாயகன் மற்றும் ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களின் ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஐயோ பாத்தவுடனே பத்திக்கிச்சி!.. வேறலெலவில் இறங்கி வெறியேத்தும் சிருஷ்டி டாங்கே…
அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதனை தொடர்ந்து போன வாரம் அசோக் செல்வன் மனைவி நடித்த கண்ணகி திரைப்படம் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை அசோக் செல்வன், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள சபாநாயகன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதன் காரணமாக பல இடங்களில் அந்த படத்திற்கான காட்சிகள் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர். அதே போல ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் கிடைத்த பிக்கப் வார நாட்களில் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இதையும் படிங்க: விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…