தொடர்ந்து ப்ளாப் படங்கள்!..இனி விஜயெல்லாம் நடிகனாகவே மாட்டான்..கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்..
விஜயின் வெற்றி பட நாயகனாக தற்போது இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவரினை வைத்து படமெடுக்கவே முடியாது என்ற நிலைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவருக்கான மார்க்கெட் இன்று மிகப்பெரியதாக இருக்கிறது. கதை இல்லாமல் வெறும் படம் எடுத்தாலே படத்தில் லாபம் பார்த்து விடலாம் என்ற ரீதியில் இருக்கிறார். இவரை நாயகனாக மாற்றியதில் முதல் பங்கு என்னவோ அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தான் உண்டு. தொடர்ச்சியாக அவரை வைத்து படத்தினை இயக்கி வந்தார் என்பது அனைவருக்கும் அறிந்த செய்தி தான்.
ஆனால் ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரே இனி இவனை வைத்து படமெடுக்க முடியாது. நடிப்பேன் எனக் கூறாதே. உன்னால் என் இரண்டு வீடு போய் விட்டதாக விஜயை அடித்து இருக்கிறார். இதில் கடுப்பான விஜய் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாராம். ஷோபா தான் இந்த ஒரு படம் எடுக்கலாம் எனக் கூறியே எஸ்.ஏ.சியினை சமாதானம் செய்தாராம். இதை தொடர்ந்தே எஸ்.ஏ.சி தனது சக தயாரிப்பாளர்களை அழைத்து அவர் இயக்கிய மூன்றாவது படத்தினை போட்டுக் காட்டினாராம்.
அப்போது படத்தினை பார்த்தவர் பைரவி படத்தின் இயக்குனர் பாஸ்கரன். அவருக்கு விஜயினை வைத்து படமெடுக்க ஆவல் ஏற்பட்டதாம். உடனே எஸ்.ஏ.சியினை சந்தித்து இதை கூறி இருக்கிறார். நீங்களே இப்படத்தினை இயக்கி விடுங்கள் எனவும் கூறினாராம். அக்கூட்டணியில் வெளிவந்த படம் தான் விஷ்ணு. அப்படமும் சுமார் வசூல் தான் பெற்றது என்றாலும் விஜயின் கேரியரில் ஒரு ஏற்றத்தினை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.