Cinema News
என் அப்பா, அண்ணன் இறந்தப்போ கூட எனக்கு இப்படி ஆகல!.. விஜயகாந்துக்காக உருகும் எஸ்.ஏ.சி.
Vijayakanth: விஜயகாந்த் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டபோது ஜாவா பைக்கில் ஸ்டைலாக அவர் போவதை பார்த்த எஸ்.ஏ.சி. தனது உதவி இயக்குனரை அழைத்து அவரை மடக்கிப்பிடித்து தன்னிடம் அழைத்து வரசொன்னார். அப்படித்தான் விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகமானார்.
சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு ஒரு நல்ல ஹீரோவை தேடிக்கொண்டிருந்த சந்திரசேகருக்கு அதற்கு விஜயகாந்த் பொறுத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அப்படித்தான் அப்படம் உருவானது. ஆங்கிலத்தில் Angry young man என சொல்வார்கள். அதுபோல, ஒரு கோபமான இளைஞராக அப்படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். படமோ சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..
இந்த படம்தான் விஜயகாந்தை வைத்து படமெடுக்கலாம் என்கிற தைரியத்தை இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடம் ஏற்படுத்தி்யது. எனவே, எஸ்.ஏ.சி மீது மிகுந்த அன்பும், மரியாதையையும் வைத்திருந்தார் விஜயகாந்த். அதனால்தான் செந்தூரப்பாண்டி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்க அவர் அழைத்தபோது உடனே சம்மதம் சொல்லி நடித்து கொடுத்தார். அதற்கு அவர் சம்பளமும் வாங்கவில்லை.
விஜயகாந்த்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை போய் நேரில் பார்த்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்தார். அப்போது அவர் மனைவியுடன் வெளிநாட்டுக்கு போயிருந்தார். ஆனாலும், வீடியோ மூலம் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
இதையும் படிங்க: வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..
இந்நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய எஸ்.ஏ.சி விஜயகாந்தின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அதோடு, சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘விஜி இறந்தபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். வருவதற்கு முயற்சி செய்தும் என்னால் வரமுடியவில்லை. 2 நாட்கள் எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. 2 நாட்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துகொண்டு அழுதுகொண்டே இருந்தேன்.
என் அப்பா இறந்தபோதும், அண்ணன் இறந்தபோதும் நான் அழுதேன். ஆனால், எனக்கு மன அழுத்தம் ஏற்படவில்லை. ஆனால், விஜயகாந்தின் மரணம் எனக்கு மன அழுத்ததை ஏற்படுத்திவிட்டது. இன்னும் அதிலிருந்து நான் மீளவில்லை என எஸ்.ஏ.சி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: முடிஞ்சா என்னைத்தாண்டி போங்க! சவுக்குக்கட்டைய கையில் எடுத்த விஜயகாந்த் – அமைதியான மாணவர்கள்