Connect with us
vijayakanth

Cinema News

அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

Vijayakanth: சக மனிதர்களை மதித்து நடப்பதில் விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. குறிப்பாக மூத்த நடிகர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். படப்பிடிப்பு தளங்களில் சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என பாரபட்சம் எல்லாம் அவரிடம் இருக்காது. பெரியண்ணா படத்தில் நடித்தபோது ஒரிரு படங்களில்தான் சூர்யா நடித்திருந்தார்.

நம்ம சிவக்குமார் பையன் என சொல்லி அவருக்காக கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார். அதோடு, உணவு இடைவேளையில் அவருக்கு சாப்பாடும் ஊட்டிவிடுவாராம். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா இதை சொல்லி கதறி அழுதார். இப்படி பல சம்பவங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் பத்தி பேசும் போது நடுவுல ஏன் விஜய் வராரு!.. சட்டென டென்ஷனான எஸ்.ஏ. சந்திரசேகர்!..

ரஜினி, கமலும் அவருக்கு போட்டி நடிகர்கள் என்றாலும் மரியாதையுடன் அவர்களை ‘அண்ணன்’ என்றே அழைப்பார். தன்னுடைய படப்பிடிப்பில் யாரும் அவமானப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். யாரையும் அவமரியாதையாக பேசமாட்டார்… நடத்தவும் மாட்டார்.. அதற்கு வடிவேலுவே மிகப்பெரிய உதாரணம். வடிவேலு அவரை மிகவும் அசிங்கமாக பிரச்சாரத்தில் விமர்சித்த போதும் அவரை பற்றி ஒரு வார்த்தை கூட விஜயகாந்த் பேசவில்லை.

அவர் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலடி என யாரும் அவரை பற்றி திட்டி பேசவேண்டாம் என தனது கட்சி தொண்டர்களிடம் சொன்ன கண்ணியவான்தான் விஜயகாந்த். பின்னாளில் வடிவேலு 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது ‘அவர் ஒரு நல்ல நடிகர். தொடர்ந்து நடிக்க வேண்டும்’ என வருத்தப்பட்டவரும் அவர்தான்.

இதையும் படிங்க: வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..

பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர்தான் டெல்லி கணேஷ். இவர் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ‘ஒரு படத்தில் விஜயகாந்தின் அப்பாவாக நான் நடித்தேன். ஒரு காட்சியில் அவர் கால் வலிக்கிறது என சொல்வார். நான் அவரின் காலை பிடித்துவிடுவது போல் காட்சி. ஆனால், அதற்கு விஜயகாந்த் சம்மதிக்கவில்லை.

அவர் எவ்வளவு பெரிய நடிகர்.. வயதில் மூத்தவர். அவர் போய் என் காலை பிடிப்பதா?.. காட்சியை மாற்றுங்கள் என இயக்குனரிடம் சொல்லிவிட்டார். அதன்பின் நானே அவரிடம் போய் ‘என்னை டெல்லி கணேஷாக பார்க்க வேண்டும். கதைப்படி மகன் மேல் பாசமாக இருக்கும் அப்பா அதை செய்கிறார். அப்படி மட்டும் பாருங்கள்’ என சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். அவரின் காலை தொடும்போது என்னை தொட்டு கும்பிட்டு தயங்கியபடியே நடித்தார். அப்படிப்பட்டவர்தான் விஜயகாந்த். அவருக்கு இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை’ என அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

google news
Continue Reading

More in Cinema News

To Top