Cinema News
எஸ்ஏசி படத்தையே சுட்டு அண்ணனை வச்சு எடுத்திருக்காரு விபி.. குட்டு உடைஞ்சிட்டா!
Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் கோட் திரைப்படம் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தின் அப்பட்டமான காப்பி என்ற ஆச்சரிய தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது.
விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் இறுதியில் இருக்கிறார். அவருடைய கடைசி சில படங்களில் கோட் திரைப்படம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கிறார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் கதை விஜயின் தந்தையும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ராஜதுரை படத்தின் கதையும் ஒன்றுதான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சீன்னை இல்லை மொத்த படக்கதையும் சுட்டு வைத்துள்ளனர்.
ராஜதுரை படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். நேர்மையான காவல்துறை அதிகாரி விஜயகாந்த் வில்லனாக வரும் ஆனந்தராஜை அடித்து துவைத்து இருப்பார். அவரை பழி வாங்க விஜயகாந்தின் மகனை கடத்தி சென்று விடுவார் ஆனந்தராஜ்.
இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review
தூக்கி சென்று அவர் வளர்ப்பில் கொடூர வில்லனாக வளர்த்துவிடுவார். இளவயது விஜயகாந்த் அப்பாவிடம் மல்லுக்கு நிற்பதுதான் படமாக இருக்கும். இதேதான் தற்போது கோட் படத்திலும் இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விஜயின் இயக்குனர்கள் தொடர்ச்சியாக இந்த காப்பி அடித்து சிக்குவதையே வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். இதுக்கு படக்குழு எதுவும் பதில் சொல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்வீட்டைக் காண: https://x.com/White_Bear_RP/status/1831576757092413557