இப்பதான்டா நிம்மதி!.. விஜய் மீதுள்ள காண்டை சீரியலில் காட்டிய எஸ்.ஏ.சி.. வீடியோ பாருங்க…

Published on: August 15, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவின் 80களில் பல திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தான் இயக்கும் படங்களில் சட்டத்தின் ஓட்டையை பற்றியும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சிப்பார். இதனால் இவருக்கு புரட்சி இயக்குனர் என்கிற பெயரும் கிடைத்தது.

சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக உருவாக்கியவர் இவர்தான். ரஜினியை வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தையும் இயக்கியிருந்தார். டீன் ஏஜில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட விஜயை ஹீரோவாக உருவாக்கியவர் இவர்தான். விஜயை வைத்து நாளைய தீர்ப்பு, ரசிகன், மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்ள என சில படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதியா?!.. நடிக்காமல் போனதற்கு காரணம் நெல்சனா!.. இது எப்ப?!..

ஆனால், விஜய் ஒரு ஹீரோவாக புரமோட் ஆகவில்லை. எனவே, பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று தன் மகன் விஜய்க்காக வாய்ப்பு கேட்டார். யாரும் முன்வரவில்லை. பல நடிகர்களிடம் சென்று நீங்கள் நடிக்கும் படங்கள் என் மகன் விஜயை உங்கள் தம்பியாக நடிக்க வையுங்கள் என கெஞ்சினார். எல்லோரும் தட்டி கழித்தனர். விஜயகாந்த் மட்டும் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார்.

பூவே உனக்காக படத்திற்கு பின் விஜய் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஒருகட்டத்தில் முன்னணி நடிகராக மாறினார். இப்போது ரஜினியிடம் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு வசூல் மன்னனாக மாறிவிட்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமூகமான உறவு இல்லை. இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை. இது தொடர்பாக தனது ஆதங்கத்தை எஸ்.ஏ.சி பல பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும், விஜயின் மனம் மாறவே இல்லை. தாய், தந்தையிடமிருந்து பிரிந்து சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயிலர் பாட்டுக்கு லெஜெண்ட் சரவணா போட்ட மெர்சல் டேன்ஸ்!. நீ செம மாஸ் தலைவா!…

ஒருபக்கம் எஸ்.ஏ.சி. சீரியலிலும் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில், அவர் நடித்து வரும் சீரியலில் அவர் வசனம் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ‘திடீர்னு உனக்கு வசதி வாய்பு வந்திருச்சி.. பணக்காரன் ஆயிட்ட. ஆனா இதுக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்?. இந்த நிலமைக்கு எப்படி வந்தோம்?. அதுக்கு காரணமாக இருந்தவங்க யாரு? இதெல்லாம் யோசிக்கணும். கொஞ்சமாச்சும் நன்றி இருக்கணும்’ என அவர் வசனம் பேசுகிறார்.

இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து ‘எஸ்.ஏ.சி விஜயை மனதில் வைத்தே இந்த வசனத்தை பேசியிருக்கிறார்’ என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்:

https://twitter.com/TrollywoodX/status/1690740719080869888

 

இதையும் படிங்க: அடங்காத ரசிகர்களின் அட்ராசிட்டி.. ஆடியோ ரிலீஸுக்கு வேற பிளான் போட்ட விஜய்!….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.