10 நாளில் நிறுத்தப்பட்ட விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்...எஸ்.ஏ.சி செயலால் அதிர்ந்த படக்குழு...
இளைய தளபதி விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த லவ்டுடே திரைப்படம் 10 நாள் சூட்டிங் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
வித்தியாசமான கிளைமாக்ஸால் பெரிதும் வெற்றிப்பெற்ற திரைப்படம் லவ் டுடே. விஜய் நடிப்பில் சுவலட்சுமி நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க பாலசேகரன் என்பவர் இயக்கி இருந்தார்.
விஜயை பெரிதாக வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அந்த சமயம் இந்த முடிவுகளை அவர் அப்பா தான் எடுத்து வந்திருக்கிறார். அந்த வகையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் சிபாரிசில் இயக்குனராக வந்தவர் பாலசேகரன்.
லவ் டுடே கதை பிடித்துப்போனதால் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று கொண்டிருந்திருக்கிறது. 10 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற நிலையில், படக்குழுவில் இருந்த சிலர் படப்பிடிப்பை நடத்தவிடாமல் செய்திருக்கிறார்கள். பாலசேகரன் பெரிதாக திரை அனுபவம் இல்லாதவர். அவரால் இப்படத்தை சரியாக இயக்க முடியாது. இப்படமும் வெல்லாது என தயாரிப்பாளரிடம் கோல்மூட்டியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, படத்தின் 10 நாட்கள் எடுக்கப்பட்ட காட்சியை தயாரிப்பாளரிடம் காட்டி இருக்கிறார்.
அதை பார்த்த, ஆர்.பி.சௌத்ரி நன்றாக தான் எடுத்திருக்கிறார். இருந்தும், இதுகுறித்து எஸ்.ஏ.சியிடம் கேட்டுவிடலாம் எனக் கூறிவிட்டாராம். இதைத் தொடர்ந்து, படத்தை எஸ்.ஏ.சிக்கு காட்டினாராம் பாலசேகரன். அதை பொறுமையாக பார்த்தவர். என்னிடம் சொன்ன கதை தான் காட்சியாக மாறி இருக்கிறது. இதில் யாருக்கும் இப்போது பிரச்சனை. உடனே படப்பிடிப்பை துவங்குங்கள் எனக் கூறிவிட்டு சென்றாராம்.
இதையும் படிங்க: மாசத்துக்கு ஒருமுறையாவது விஜய் இதை செய்யணும்….கண்ணீர் விட்ட எஸ்.ஏ.சி…