சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் - கேப்டன் குறித்து SAC உருக்கம்
Director SA Chandrasekar: தமிழ் சினிமாவில் ஆரம்பகால கட்டத்தில் புரட்சி இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக இருந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவருடைய படங்கள் பெரும்பாலும் சமூக கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் இருக்கும்.
விஜயகாந்த் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த ஒரு நபர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த போது எஸ்.ஏ.சியின் படங்களில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய புகழைப் பெற்றார்.
இதையும் படிங்க: ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா…
விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சி 17 படங்களை இயக்கியிருக்கிறார். கேப்டன் எப்போதுமே எஸ்.ஏ.சியை டைரக்டர் சார், எங்க டைரக்டர் என்றுதான் சொல்வாராம். எஸ்.ஏ.சி மீது அலாதி அன்பு கொண்டவராகவும் விஜயகாந்த் இருந்திருக்கிறார்.
நேற்று முன்தினம் எஸ்.ஏ.சி விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை கூறினார். அதாவது என் அம்மா, அப்பா, அண்ணன் இறந்த போதுகூட இந்தளவு என் மனது வேதனை அடையவில்லை.
இதையும் படிங்க: எம்ஜிஆரை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு இருந்த நடிகை… அப்புறம் நடந்தது இதுதான்!..
ஆனால் விஜயகாந்தின் மறைவு என்னை மிகவும் பாதித்திருக்கிறது. அவர் சமாதியை நெருங்கும் வரை என் கால்கள் ஆடி விட்டன. முன்பு வரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்ற போது விஜி என்னிடம் ஏதோ சொல்ல நினைத்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை.
இன்னொரு விஷயம் ஒரு வேளை விஜிக்கு நெருக்கமானவர்களை இறுதி காலத்தில் விஜி சந்தித்து பேசியிருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அந்த விஷயத்தில் அவர் குடும்பத்தார் மீது நான் மிகவும் கோபத்துடன் இருக்கிறேன்.
இதையும் படிங்க: இளையராஜா இசையில் அற்புதம்… அதிசயம்… ஒரே ராகத்தில் மாறுபட்ட இரு பாடல்கள்…!
அதுமட்டுமில்லாமல் அவரின் சர்ஜரிக்கு பிறகு விஜயகாந்த் அவர் உடலை சரியாக கவனிக்க வில்லையோ என்றும் எனக்கு தோன்றுகிறது என எஸ்.ஏ.சி மிகுந்த மனவேதனையுடன் பேசினார்.